/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தராதீர்கள்: ஏ.சி.பி., எச்சரிக்கை ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தராதீர்கள்: ஏ.சி.பி., எச்சரிக்கை
ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தராதீர்கள்: ஏ.சி.பி., எச்சரிக்கை
ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தராதீர்கள்: ஏ.சி.பி., எச்சரிக்கை
ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தராதீர்கள்: ஏ.சி.பி., எச்சரிக்கை
ADDED : செப் 18, 2025 11:00 PM

மைசூரு: ''ஏ.டி.எம்., அருகில் வந்து உதவி கேட்போரை நம்பாதீர்கள். அவர்களுக்கு பணம் எடுத்து கொடுத்து மோசம் போகாதீர்கள்,'' என மைசூரின் சைபர் கிரைம் ஏ.சி.பி., ஸ்நேஹா ராஜ் எச்சரித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அறிமுகம் இல்லாதவர்கள், ஏ.டி.எம்., மையம் அருகில் நின்று, 'எங்களிடம் ஏ.டி.எம்., கார்டு இல்லை. மிகவும் அவசரமாக பணம் தேவைப்படுகிறது. வெளியூரில் உள்ள உறவினர், பணம் அனுப்புவதாக கூறுகிறார். அந்த பணத்தை உங்களுக்கு அனுப்புவார். அதை உங்களின் ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி, எடுத்து தாருங்கள்' என கேட்டால், அவர்களை நம்பாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் பணத்தை இழக்க வேண்டி வரும். உங்களை அறியாமல் மோசடி வலையில் சிக்குவீர்கள்.
நீங்கள் யாரோ போட்ட பணத்தை எடுத்து கொடுத்த பின், உங்களின் வங்கி கணக்கு முடங்கும். நீங்கள் எங்களிடம் புகார் அளிப்பீர்கள். நாங்கள் விசாரணை நடத்தும் போது, தொலை துார ஊரிலுள்ள யாரோ ஒருவர், வேறு யாரோ ஒருவரை, சைபர் மோசடி செய்திருப்பார். அந்த பணத்தை உங்களின் கணக்குக்கு அனுப்பி, உங்கள் மூலமாக எடுத்து ஏமாற்றியது தெரியும்.
சைபர் குற்றவாளிகள், மோசடி செய்து சம்பாதித்த பணம், ஒருவரிடமிருந்து, ஒருவருக்கு மாறி, மாறி வேறு யாருக்கோ வந்திருக்கும். மோசடியாளர்களின் கணக்கில் பணம் இருந்தாலும், அதை எடுக்கமாட்டார். பணம் எடுத்தால் எளிதில் சிக்குவர். இதற்காக அவர்கள், புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். ஏ.டி.எம்., அ ருகில் சென்று, அங்கு பணம் எடுக்க வருவோரிடம் உதவி கேட்பர். அவர்கள் சம்மதித்தால், அவர்களின் கணக்குக்கு பணம் அனுப்பி, அதை எடுத்து கொள்வர்.
பணம் எங்கு எடுக்கப்பட்டது என, விசாரணை நடத்தினால், சிக்குவது நீங்கள் தான். எனவே அறிமுகம் இல்லாதவர்களுக்கு, பணம் எடுத்து கொடுக்காதீர்கள். உங்கள் கணக்கு முடங்கி விட்டால், அதை எளிதில் மீட்க முடியாது. எங்கு புகார் பதிவாகியுள்ளதோ, அங்கு சென்று போலீசாரிடம் நடந்ததை விவரித்த பின்னரே, பிரச்னை சரியாகும்.
ஒருவேளை எந்த ஊரில் புகார் பதிவாகியிருந்தாலும், நீங்கள் அங்கு செல்ல வேண்டும். எந்த தவறும் செய்யாத நீங்கள், குற்றவாளியாக வேண்டி வரும். எனவே அறிமுகம் இல்லாதோரு க்கு உதவாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.