/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாதி வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற்ற தலித் பெண் சாதி வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற்ற தலித் பெண்
சாதி வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற்ற தலித் பெண்
சாதி வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற்ற தலித் பெண்
சாதி வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற்ற தலித் பெண்
ADDED : மார் 25, 2025 03:00 AM

உடுப்பி: மீனவர்கள் மீதான சாதிய வன்கொடுமை புகாரை வாபஸ் பெறுவதாக, தாக்குதலுக்கு உள்ளான தலித் பெண் கூறியுள்ளார்.
உடுப்பி, மல்பே துறைமுகத்தில் லட்சுமிபாய் என்ற தலித் சமூகத்தை சேர்ந்த பெண், வேலை செய்து வந்தார். இவர், 18ம் தேதி, துறைமுகத்தில் உள்ள மீனை திருடியதற்காக, மரத்தில் கட்டி வைத்து ஐந்து மீனவர்களால் தாக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் பெண்ணை தாக்கிய ஐந்து பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென முதல்வர் சித்தராமையா, தன் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிடம் போலீசார் புகார் பெற்று, ஜாதிய வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து, ஐந்து மீனவர்களை கைது செய்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மீனவர்களை விடுதலை செய்யுமாறும் கூறி மல்பே மீனவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று லட்சுமிபாய், உடுப்பி கலெக்டர் வித்யாகுமாரியை சந்தித்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனு அளித்தார்.
இதுதொடர்பாக லட்சுமி பாய் கூறுகையில், “போலீசார் வற்புறுத்தலின்படியே வழக்கை தொடர்ந்தேன். போலீசார், என் கட்டை விரலை பிடித்து கட்டாயப்படுத்தி ரேகை வைத்தனர். இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. சாதிய ரீதியான தாக்குதல் எதுவும் என் மீது நடத்தப்படவில்லை. பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட்டது,” என்றார்.