/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இந்தாண்டு இறுதிக்குள் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல் இந்தாண்டு இறுதிக்குள் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல்
இந்தாண்டு இறுதிக்குள் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல்
இந்தாண்டு இறுதிக்குள் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல்
இந்தாண்டு இறுதிக்குள் 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல்
ADDED : மார் 25, 2025 02:59 AM

மைசூரு : ''நடப்பாண்டுக்குள் கர்நாடகாவில் ஐந்து மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்,'' என, கர்நாடக மாநில தேர்தல் கமிஷனர் சங்கரேசி தெரிவித்தார்.
மைசூரு மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை. இவ்விரண்டு ஆண்டுகளும் மாநகராட்சிக்கான பட்ஜெட்டை அதிகாரிகளே தாக்கி செய்தனர்.
வார்டுகளில் மக்கள் நல பணிகள் செய்யவும், குறைகளை கேட்கவும் கவுன்சிலர்கள் இல்லாததால், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தங்கள் பகுதி குறைகளை கேட்க விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென, முன்னாள் கவுன்சிலர்கள், நகர மக்கள், பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில தேர்தல் கமிஷனர் சங்கரேசி, நேற்று மைசூரு வந்திருந்தார். தேர்தல் தொடர்பான விபரங்கள், ஆவணங்கள், வாக்காளர் பட்டியல், ஒதுக்கீடு உட்பட அனைத்தும் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இடஒதுக்கீடு பட்டியல் அளிக்கும்படி மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அரசு பட்டியல் கொடுக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, பழைய இடஒதுக்கீடு பட்டியலின்படி தேர்தல் நடத்துவோம்.
மைசூரு, ஷிவமொக்கா, தாவணகெரே, துமகூரு, மங்களூரு ஆகிய ஐந்து மாநகராட்சிகளிலும் வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. இம்மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. நடப்பாண்டுக்குள் கர்நாடகாவில் ஐந்து மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.