/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருப்பதி தேவஸ்தானத்துக்கு கூடுதலாக 2,000 டன் நெய் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கூடுதலாக 2,000 டன் நெய்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கூடுதலாக 2,000 டன் நெய்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கூடுதலாக 2,000 டன் நெய்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கூடுதலாக 2,000 டன் நெய்
ADDED : மார் 14, 2025 06:46 AM

பெங்களூரு: கன்னடம், தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதியை முன்னிட்டு, லட்டு தயாரிக்க உடனடியாக 2,000 டன் நந்தினி நெய் அனுப்பி வைக்கும்படி, கே.எம்.எப்., எனும் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தி கூட்டமைப்பை, டி.டி.டி., எனும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருமலை திருப்பதிக்கு, 20 ஆண்டுகளாக நந்தினி நெய் வழங்கப்பட்டு வந்தது. லட்டு தயாரிப்பதற்காக, 2013 முதல் 2018 காலகட்டத்தில், 3,000 டன்னுக்கும் அதிகமான நந்தி நெய்யை, டி.டி.டி., கொள்முதல் செய்திருந்தது.
கடந்த 2019ல் டி.டி.டி., கேட்டுக் கொண்ட அளவை விட, 1,700 டன் நெய் மட்டுமே கே.எம்.எப்., விநியோகம் செய்தது. 2020, 2022, 2023, 2024ல் டி.டி.டி., கேட்ட விலைக்கு கே.எம்.எப்., ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்டது.
எனவே, வேறொரு தனியார் நிறுவனத்திடம், டி.டி.டி., நெய்யை கொள்முதல் செய்தது.
சந்திரபாபு நாயுடு முதல்வரான பின், லட்டுக்கு பயன்படுத்தும் நெய் தரமற்றதாக உள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, கே.எம்.எப்.,பின் 'நந்தினி' நெய்யை, டி.டி.டி., மீண்டும் வாங்கி வருகிறது.
கடந்த ஓராண்டில், டி.டி.டி.,க்கு 3,200 டன் நெய் வழங்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 600 டன் நெய் வேண்டுமென டி.டி.டி., கேட்டிருந்தது.
இம்மாதம் இறுதியில் யுகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இதை கருத்தில் கொண்ட டி.டி.டி., 'லட்டு தயாரிக்க 2,000 டன் நெய் தேவைப்படுகிறது. இதை உடனடியாக அனுப்பி வைக்கவும்' என கேட்டுக் கொண்டுள்ளது.