/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகாவில் ஆண்டுக்காண்டு 'போக்சோ' வழக்குகள் அதிகரிப்பு!: 2024ல் மட்டும் 3,397 புகார்கள் பதிவானதால் அதிர்ச்சி கர்நாடகாவில் ஆண்டுக்காண்டு 'போக்சோ' வழக்குகள் அதிகரிப்பு!: 2024ல் மட்டும் 3,397 புகார்கள் பதிவானதால் அதிர்ச்சி
கர்நாடகாவில் ஆண்டுக்காண்டு 'போக்சோ' வழக்குகள் அதிகரிப்பு!: 2024ல் மட்டும் 3,397 புகார்கள் பதிவானதால் அதிர்ச்சி
கர்நாடகாவில் ஆண்டுக்காண்டு 'போக்சோ' வழக்குகள் அதிகரிப்பு!: 2024ல் மட்டும் 3,397 புகார்கள் பதிவானதால் அதிர்ச்சி
கர்நாடகாவில் ஆண்டுக்காண்டு 'போக்சோ' வழக்குகள் அதிகரிப்பு!: 2024ல் மட்டும் 3,397 புகார்கள் பதிவானதால் அதிர்ச்சி
ADDED : மார் 14, 2025 06:49 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான, 'போக்சோ' வழக்குகளின்விபரம் மாநில அரசு தரப்பில் வெளியிடப்பட்டது. இதில், கடந்த 2023 - 24ல் மட்டும் 3,397 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் நாளுக்கு நாள் நடக்கும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதிலும், குறிப்பாக பெண்கள், சிறுமியர் மீதான பாலியல் சீண்டல்கள், பாலியல் பலாத்காரங்கள், குழந்தை திருமணங்கள் போன்றவை அதிகரித்து உள்ளன.
இதனால், பல பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை வெளியே அனுப்பவே அச்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், இப்பிரச்னையை எதிர்க்கட்சியான பா.ஜ., தரப்பில், சட்டசபையில் எழுப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்படி, ஷிவமொக்கா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா, 'கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான போக்சோ வழக்குகள் குறித்த விபரங்கள் குறித்து, சட்டசபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில்:
கடந்த 2021 - 22ல், 2,205 போக்சோ வழக்குகளும், 2022 - 23ல், 2,804 போக்சோ வழக்குகளும், 2023 - 24ல், 3,397 போக்சோ வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இதில், கடந்த மூன்று ஆண்டுகளில் பெங்களூரு, பெங்களூரு ரூரலில் மட்டும் 1,164 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன.
குழந்தை திருமணம்
கடந்த 2021 - 22ல், 418 குழந்தை திருமண வழக்குகளும், 2022 - 23ல், 328 குழந்தை திருமண வழக்குகளும், 2023 - 24ல், 719 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த தரவுகளை வைத்து பார்த்தால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 593 போக்சோ வழக்குகளும், 391 குழந்தை திருமண வழக்குகளும் அதிகரித்து உள்ளன.
அதிலும், மூன்று ஆண்டுகளில் பதிவான போக்சோ வழக்குகளில், பெங்களூரு, பெங்களூரு ரூரலில் மட்டுமே 13 சதவீத வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த தரவுகள், நகரத்தில் வாழும் சிறுமியரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
தங்கம் விலை நிலவரம் போல, தினமும் போக்சோ வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.