/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எம்.எல்.ஏ.,க்களுக்கு இரவு விருந்து துணை முதல்வர் சிவகுமார் ஏற்பாடு எம்.எல்.ஏ.,க்களுக்கு இரவு விருந்து துணை முதல்வர் சிவகுமார் ஏற்பாடு
எம்.எல்.ஏ.,க்களுக்கு இரவு விருந்து துணை முதல்வர் சிவகுமார் ஏற்பாடு
எம்.எல்.ஏ.,க்களுக்கு இரவு விருந்து துணை முதல்வர் சிவகுமார் ஏற்பாடு
எம்.எல்.ஏ.,க்களுக்கு இரவு விருந்து துணை முதல்வர் சிவகுமார் ஏற்பாடு
ADDED : மார் 14, 2025 06:38 AM

பெங்களூரு: ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வர் என்று சித்தராமையா கூறியதன் எதிரொலியாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் இழுக்க, துணை முதல்வர் சிவகுமார் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவராக இருப்பவரின் தலைமையில், தேர்தலில் வெற்றி பெற்று கட்சி ஆட்சிக்கு வந்தால், தலைவருக்கே முதல்வர் பதவி வழங்கப்படும் வழக்கம் இருந்தது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில் சிவகுமார் தலைமையில், காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.
ஆனால் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையாவுக்கு, முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.
சிவகுமார் துணை முதல்வர் ஆனார். ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று, கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை உறுதியான தகவல் இல்லை.
நேற்று முன்தினம் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு, சித்தராமையா பதில் அளிக்கையில், “ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வர்,” என்று கூறினார். இது, சிவகுமாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதனால் தன் ஆதரவை பெருக்கும் வகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு நாளை இரவு விருந்துக்கு, சிவகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விருந்தின் மூலம், எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கையை பெறும் முயற்சியில், அவர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல்முறை எம்.எல்.ஏ.,க்கள் 60 பேர், இரவு விருந்திற்கு ஒன்றாக கூடினர்.
இந்த விருந்தை ஏற்பாடு செய்தது சிவகுமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ரவிகுமார் கனிகா, பசவராஜ் சிவகங்கா என்பது குறிப்பிடத்தக்கது.