Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/மலர்கள் மையத்தில் செடிகள் விற்பனை

மலர்கள் மையத்தில் செடிகள் விற்பனை

மலர்கள் மையத்தில் செடிகள் விற்பனை

மலர்கள் மையத்தில் செடிகள் விற்பனை

PUBLISHED ON : பிப் 05, 2025


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் மலர்ச்செடிகள், அழகுசெடிகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் விற்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் ரோட்டில் உள்ள இம்மையத்தில் மல்லிகை, பிச்சி, முல்லை, செம்பருத்தி, நந்தியாவட்டை, அரளி பூச்செடிகள், குரோட்டன்ஸ், மணி பிளான்ட், காக்டஸ், பனை போன்ற அழகு செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. செடிகள் ரூ.15 முதல் ரூ.250 வரை விற்பனைக்கு உள்ளது. இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கிலோ ரூ.50க்கும், உயிர் பூஞ்சாணக் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் கிலோ ரூ.150க்கும் மண்புழு உரம் ரூ.15க்கும் வாங்கலாம்.

விழாக்கள், வீட்டு விசேஷங்களின் போது பூச்செடிகளை பரிசளிக்கும் வகையில் மொத்தமாக ஆர்டர் செய்தும் வாங்கலாம் என்றார். தோட்டக்கலை அலுவலரை 89460 57834ல் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us