/இணைப்பு மலர்/விவசாய மலர்/சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்
சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

PUBLISHED ON : பிப் 05, 2025

பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்படும் போது அது விவசாயிகளுக்கு அதிக இழப்பை ஏற்படுத்துகிறது.
வண்டுகளின் வகைகள்
காண்டாமிருக வண்டு, ஈரியோபைட் சிலந்தி, கருந்தலை புழு ஆகியவை தென்னையின் மகசூலை மட்டுமே பாதிக்கின்றன. ஐந்து முதல் 20 வயதுள்ள தென்னை மரங்களை சிவப்பு கூன் வண்டு தாக்கினால் மரத்தையே இழக்க நேரிடும். குருத்தழுகல் மற்றும் காண்டாமிருக வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரங்களை இவை தேர்வு செய்கின்றன. பருவ மழை காலத்தில் இதன் பாதிப்பு அதிகரிக்கும்.
தென்னை நாரால் கூடு பின்னி கூட்டுப்புழுவாக 15 -- 30 நாட்கள் வாழ்ந்து முழு வளர்ச்சியடைந்த வண்டாக வெளிவரும். புழுக்கள் உட்சென்ற மரத்தண்டின் சிறிய துவாரத்தின் வழியே சிவப்பு நீர் வடிந்து காய்ந்த பிசின் காணப்படும். பட்டைகளின் அடிப்பாகம் வெடித்து காணப்படும். மரங்களின் நுனிப்பகுதி அழுகி துர்நாற்றம் வீசும். தாக்குதல் அதிகரித்தால் மரத்தின் உட்புற ஓலைகள் மஞ்சள் நிறமாகி கொண்டைப்பகுதி முறிந்து மரம் பட்டுவிடும்.
மேலாண்மை முறை
இனக்கவர்ச்சி பொறிகள் தான் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆண் வண்டின் வாசனையை வெளியிடும் இந்த பொறிகளை எக்டேருக்கு ஐந்து எண்ணிக்கையில் பொருத்தினால் பெண் வண்டுகள் பொறியில் வந்து விழும். அவற்றை அழித்து விடலாம்.
பாதிக்கப்பட்ட மரங்களில் மேலே உள்ள துளையை தவிர மற்றதை அடைக்க வேண்டும். இத்துளை வழியே புனல் மூலம் ஒரு சதவீத கார்போரைல் (20கி/லி) அல்லது 0.2 சதவீத டிரைகுளோர்பான் மருந்தை தண்ணீருடன் ஒரு லிட்டர் அளவு தயாரித்து ஊற்ற வேண்டும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழித்து மீண்டும் செய்யலாம்.
கொண்டைப்பகுதியில் தாக்குதல் இருந்தால் ஓலைகளை சுத்தம் செய்து பூச்சிக்கொல்லி கரைசலை ஊற்றவேண்டும். தண்டில் துளைகள் இருந்தால் தார் அல்லது சிமென்ட் பூச்சால் அடைக்கவேண்டும்.
மணலுடன் வேப்பங்கொட்டைப்பொடி 2:1 என்ற வீதத்தில் கலந்த கலவை அல்லது லின்டேன் 1.3 கிராம் மற்றும் மணல் கலந்து மட்டை இடுக்குகளில் 3 மாதத்திற்கு ஒருமுறை வைக்க வேண்டும். இதன் மூலம் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்பு கூன்வண்டு முட்டை இடுவதை தவிர்க்கலாம்.
அருண்ராஜ், தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல் துறை)
மகேஸ்வரன், தொழில் நுட்பவல்லுநர் (உழவியல்)
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி