Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: நீதியை காத்த மாமனார்!

விசேஷம் இது வித்தியாசம்: நீதியை காத்த மாமனார்!

விசேஷம் இது வித்தியாசம்: நீதியை காத்த மாமனார்!

விசேஷம் இது வித்தியாசம்: நீதியை காத்த மாமனார்!

PUBLISHED ON : மார் 30, 2025


Google News
Latest Tamil News
மார்ச் 30 - தெலுங்கு புத்தாண்டு

தமிழகத்தில் சித்திரை, ம் தேதியை, தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். அது போல், தெலுங்கு மற்றும் சுன்னட மக்கள், தங்கள் புத்தாண்டை, 'யுகாதி' ஆக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் அவர்கள் ராமாயணக் கதைகளைக் கேட்பதைப் புண்ணியமாகக் கருதுவர். நாமும், இந்த புனிதநாளில், வித்தியாசமான கதை ஒன்றைக் கேட்போமா...

மேகநாத் பாத் காவ்யா என்ற வங்காள மொழி காவியம், வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறாத, சுலோசனா என்பவன் பற்றிய குறிப்பை கூறுகிறது.

தேவர்களின் அரசனான இந்திரனைக் கைது செய்தான், ராவணனின் மகனான, இந்திரஜித், அவனை, விடுவிக்க கோரினார், பிரம்மா, அப்படியானால், தனக்கு சாகாவரம் வேண்டுமென கேட்டான், இந்திரஜித்.

'பிறந்தவர் இறந்தே ஆக வேண்டும்...' என்றார். பிரம்மா.

அப்படியானால், மாமனார் தான் என்னை அழிக்க வேண்டும். அவர், 14 ஆண்டுகள் உறக்கமும், உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும். நான் யாகம் செய்யும் போது தான் என்னைக் கொல்ல வேண்டும்... என, நிபந்தனை விடுத்தான், இந்திரஜித்; ஒப்புக்கொண்டார். பிரம்மா.

எந்த மருமகனையும், பெண் கொடுத்த மாமனார் கொல்ல மாட்டார். 14 ஆண்டுகள் ஒருவன் உண்ணாமலோ, உறங்காமலோ இருக்க முடியாது. யாகம் செய்பவர்களுக்கு யாரும் கெடுதல் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில், புத்திசாலித்தனமாக யோசித்து வரம் பெற்றிருந்தான். இந்திரஜித்.

ராமாயணப் போர் வந்தது. போரில் வெற்றி பெற, பிரத்யங்கிரா தேவியை வணங்கி, நிகும்பலா யாகம் செய்து கொண்டிருந்தான், இந்திரஜித். அவனை வீழ்த்தினான், லட்சுமணன்.

மரண வேதனையுடன் கிடந்த இந்திரஜித், பிரம்மாவை நினைக்க, அவரும் அங்கு வந்தார்.

'வாக்குறுதியை மீறி, என் அழிவுக்கு காரணமாகி விட்டீர்களே...' என, கோபமாய் கேட்டான்.

'இல்லை வீரனே! உன் மனைவி சுலோசனா, நாகலோசு அரசன் ஆகிசேஷனின் மகள் என்பதை நீ அறிவாய். ஆதிசேஷனே, லட்சுமணனாக அவதாரம் எடுத்து வந்துள்ளார். ஆக, உனக்கு பெண் கொடுத்த மாமனாரால் தான், நீ வீழ்த்தப்பட்டாய்.

'அவர், தன் அண்ணனை, 14 ஆண்டுகள் உணவு, உறக்கமின்றி பாதுகாப்பேன்... என. தன் தாய் சுமித்திரைக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். மேலும், அவர் பாம்பின் அம்சம். பாம்புகள் பல ஆண்டுகள் உண்ணாமல், உறங்காமல் இருக்கும் என்பதையும் நீ அறிவாய்.

யாகத்தின் போது கொல்லப்படக் கூடாது என்பது உண்மையே. ஆனால் பொதுநலத்துக்காக நடத்த வேண்டிய யாகத்தை, சுயநலத்துக்காக செய்து, யாக விதிகளை மீறினாய். உன் மரணம் நியாயமானதே...' என்றார். பிரம்மா.

அநியாயத்துக்கு துணை போகிறவர்கள், எவ்வளவு புத்திசாலிகளாய் இருந்தாலும், அழிந்து போவர் என்பதற்கு, இந்திரஜித்தின் வாழ்வு உதாரணம். இந்த அருமையான வரலாறைக் கேட்ட மகிழ்வுடன், தெலுங்கு புத்தாண்டில், நியாயப்படி நடக்க உறுதியெடுப்போம்.

- தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us