Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: எட்டாவது அதிசயம்!

கவிதைச்சோலை: எட்டாவது அதிசயம்!

கவிதைச்சோலை: எட்டாவது அதிசயம்!

கவிதைச்சோலை: எட்டாவது அதிசயம்!

PUBLISHED ON : மார் 30, 2025


Google News
Latest Tamil News
ஏப்ரல் 01 - முட்டாள்கள் தினம்!

முட்டாள் தினத்தை இதுவரை

சொந்தம் கொண்டாடி யாரும்

சுய விருப்பம் காட்டியதில்லை

ஆனாலும், உலகில்

உயர்ந்த வரலாறு படைத்து

வெற்றிக் கொடி நாட்டி வருகிறது!

பூரண புத்திசாலி எனும்

பெரும் பெருமை

மானுடப் படைப்பில் இல்லை

அதிபுத்திசாலிக்கும் இங்கே

அங்குல அளவேனும்

அடி முட்டாள்தனம் உண்டு!

முட்டாள் என்று உணரும் போதே

மனிதன் புத்திசாலி ஆகிறான்...

பிறரை முட்டாளாக்க

முயலும் போது அவன்

அடி முட்டாளாகிறான்!

 அனைத்தும் ஒன்றென்ற அத்வைத பார்வையில்

அறிவாளிக்கும், அடி முட்டாள்களுக்கும்

அர்த்தமே இல்லை என்பது

ஆன்மிக ஞானத்தின் ஆச்சரியம்!

அன்றாட வாழ்வில்

அறிவுக்கும், அன்புக்கும்

அந்நிய துாரம்...

அறிவியல் விதியில்

முட்டாள்தனத்துக்கும்

முழுமையான அன்புக்கும்

இடைவெளியே இல்லா நெருக்கம்!

ஏமாற்றுவதும்

ஏமாற்றப்படுவதும்

இன்ப சுரபியாய் இயங்குவது

உலகின் எட்டாவது அதிசயமல்லவா?

ஆகவே நண்பர்களேஏப்ரல் முதல் நாளன்று

ஏமாந்தால் அது

அவமானம் இல்லை - அது

ஆகாய உயரத்துக்கு

உயர்ந்து நிற்கும் அன்பின் முத்திரை!

எஸ்.ஆர்.யுகேஷ், விருதுநகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us