Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/மகள்களை மணம் முடிக்கும் அப்பாக்கள்!

மகள்களை மணம் முடிக்கும் அப்பாக்கள்!

மகள்களை மணம் முடிக்கும் அப்பாக்கள்!

மகள்களை மணம் முடிக்கும் அப்பாக்கள்!

PUBLISHED ON : பிப் 11, 2024


Google News
Latest Tamil News
சகோதர, சகோதரிகள் இடையேயும், தந்தை மற்றும் மகள் இடையேயும் திருமண பந்தம் ஏற்படுகிற விசித்திரமான நிகழ்வுகள், ஆங்காங்கே எப்போதாவது நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதிலும், ஒரு பெண்ணின் மரபு வழி தந்தை வேறொருவர் என்றால், அந்த வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம், சிலரிடம் இருக்கிறது.

வங்கதேசத்திலும் இப்படி ஒரு வினோத பழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பழங்குடியினம் இருக்கிறது. மாண்டி என்ற அந்த பழங்குடியின மக்கள், நாடெங்கிலும் உள்ள பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த இன மக்களிடையே தான், தந்தையே மகளை திருமணம் செய்யும் கலாசாரம் மேலோங்கி உள்ளது.

இந்த இனத்தைச் சேர்ந்த யாரேனும் ஒரு பெண், கணவரை இழந்து கைம்பெண்ணாக மாறினால், அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு நபர், அந்தப் பெண்ணை மறுமணம் செய்து கொள்வர்.

இவ்வாறு மறுமணம் செய்யும்போது, அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருந்தால், அந்தப் பெண் குழந்தை வளர்ந்து பருவம் எய்தியதும், அந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம், மாண்டி இன ஆண்களிடம் உள்ளது.

அதுவரையிலும் வளர்ப்புத் தந்தையாக பார்க்கப்பட்டு வந்த நபரை, பின்னர் அந்தப் பெண்கள், கணவராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே, பெண் குழந்தையுடன் கூடிய கைம்பெண்களை, ஆண்கள் திருமணம் செய்வர்.

மரபு வழி தந்தை மற்றும் மரபு வழி மகள் இடையே திருமணம் நடைபெறுவதில்லை. மேலும், மறுமணம் செய்து கொள்கிற பெண் மற்றும் அந்த பெண்ணின் பெண் குழந்தைக்கும் சேர்த்து வாழ்க்கை உத்தரவாதத்தை கொடுக்கின்றனர், ஆண்கள். இதனாலேயே வளர்ப்புத் தந்தை மற்றும் மகள் இடையேயான திருமணங்களை, மாண்டி இனம் ஏற்றுக் கொள்கிறது.

தற்போது, இந்த இனத்தைச் சேர்ந்த, ஓரோலா என்ற பெண்ணின் திருமணம், இதே போன்ற முறையில் நடைபெற்றுள்ளது. இந்தப் பெண்ணின் தந்தை காலமான பிறகு, இவரது தாயாரைத் திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவர், தற்போது இந்தப் பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.

—-ஜோல்னாபையன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us