/இணைப்பு மலர்/வாரமலர்/ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (13)ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (13)
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (13)

PUBLISHED ON : ஜன 28, 2024

தியாகராஜ பாகவதரின் முதல் படமான, பவளக்கொடியில் நடந்த சுவையான அனுபவம்:
'பவளக்கொடி' நாடகத்தைப் பார்த்துப் பரவசமடைந்த, லேனா செட்டியார், அதை படமாக எடுக்க விரும்பினார். கே.சுப்ரமணியத்தை இயக்குனராக்கி, படத்தை ஆரம்பித்தார்.
படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களுக்குள்ளேயே, பாகஸ்தர்களுக்குள் அபிப்ராய பேதம் ஏற்பட்டது.
'என் பங்கை உடனே செட்டில் செய்ய வேண்டும்...' என்று, போர்க்கொடி துாக்கினார், அவர்.
'தந்து விடுகிறேன். ஆனால், படம் முடிந்த பிறகு தான்...' என்றார், செட்டியார்.
'முடியவே முடியாது. கணக்கை நேர் செய்து, படத்தைத் துவங்கு...' என்றார், அந்த பொல்லாத பேர்வழி.
அவன் கிடக்கிறான், படத்தைத் துவங்கி விடுவோம் என்று, ஆரம்பித்து விட்டார், செட்டியார்.
விஷயம், அந்த பொல்லாதவரின் காதுகளுக்கு எட்டியவுடன், 'நான் யார் என்று காட்டுகிறேன் பார்...' என்று ஆவேசம் அடைந்தவர், 'நான் ஸ்டூடியோவிற்குள் வர மாட்டேன். ஆனால், வெளியில் இருந்தே உன்னைக் கதற விடுகிறேன் பார்...' என்று, அதை செயலிலும் காட்டத் துவங்கினார்.
படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டனர் என்ற தகவல் தெரிந்தால் போதும். அந்த பொல்லாத மனிதர், காரை எடுத்து உடனே வந்து விடுவார். உள்ளே வர மாட்டார். காரை வெளியில் நிறுத்தி, ஹாரனை, சத்தமாக அடித்தபடி இருப்பார்.
அவ்வளவு தான். 'கட் கட்...' என்று, கதற ஆரம்பித்து விடுவார், இயக்குனர்.
என்ன செய்ய, 'டப்பிங்' வசதி எல்லாம் அப்போது இல்லை.
காகம் கத்தினால் கூட, படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்று, அதை விரட்டுவதற்காகவே ஆட்கள் நியமிக்கப்பட்டிருப்பர். சில நல்ல மனம் கொண்ட தயாரிப்பாளர்கள், காக்கைகளை விரட்டியவர்கள் என்று, அவர்கள் பெயரையும் திரையில் போட்டு கவுரவப்படுத்துவர்.
அப்படிப்பட்ட சூழலில், அந்த மனிதர் தினமும் வந்து இம்சித்தார்.
இந்த விஷயம், பாகவதருக்குத் தெரிந்தது. அந்த மனிதரிடம், 'தயாரிப்பாளர் தரவேண்டிய பணத்தை, நானே தருகிறேன். படப்பிடிப்பை நடத்த விடுங்கள்...' என்றார்.
'என் பணத்தைத் தந்து விட்டால், நான் ஏன் தொந்தரவு செய்யப் போகிறேன்...' என்றார், அவர்.
பாகவதர், தன் கைப்பணத்தைக் கொடுத்து, அவர் கடனைத் தீர்த்தார். அதன் பிறகே, படப்பிடிப்பு ஒழுங்காக நடைபெறத் துவங்கியது.
அதுதான், பாகவதரின் முதல் படம். அது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அப்படிச் செய்தார்.
அசோக்குமார் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பாகவதரிடம், 'முற்பகுதியில், ராஜகுமாரனான நீங்கள், சாதாரணமாக இருக்கலாம். ஆனால், கதைப்படி, கண்கள் குருடாக்கப்பட்ட பின், பிற்பகுதியில், நீங்கள் உடல் இளைத்துக் காணப்பட வேண்டும்...' என்றார், இயக்குனர்.
'அவ்வளவுதானே. இதற்கு ஏன் நீங்கள் இத்தனை கவலைப்பட வேண்டும். அது என் பொறுப்பு...' என்றார், பாகவதர்.
பிற்பகுதி படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன், பாகவதர், தன் சுயக்கட்டுப்பாட்டை ஆரம்பித்து விட்டார். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு. இரு வேளை பட்டினி கிடந்ததில், உடல் மெலிந்து போனது. காட்சிகள் பிரமாதமாய் அமைந்தன.
பாகவதரோடு நடித்த சக நடிகர், பி.பி.ரங்காச்சாரி.
அவர், தன் பெண்ணின் கல்யாணப் பத்திரிகையை, பாகவதரிடம் கொடுத்துவிட்டு, தயங்கித் தயங்கி, 'என் பெண் கல்யாணத்தில், நீங்கள் கச்சேரி செய்தால், எங்கள் எல்லாருக்கும் மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கும், அண்ணா...' என்றார்.
'ரங்கா, நீ, என் நண்பன். உன் பெண் கல்யாணத்திற்கு நான் கச்சேரி செய்ய மாட்டேனா, என் மேல் உனக்கு ஏன் சந்தேகம்?' என்றார், பாகவதர்.
'அண்ணா, உங்களை நான் நன்கறிவேன். என் தயக்கத்திற்குக் காரணம், அன்று, நீங்கள் செட்டிநாட்டில் ஒரு கச்சேரிக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினர், அதனால் தான்...' என்றார்.
'ஆமாம், இப்போது தான் நினைவிற்கு வருகிறது...' என்று ஒரு கணம் திகைத்தார், பாகவதர். அடுத்த கணமே, உதவியாளரைக் கூப்பிட்டு, 'கச்சேரிக்கு வர இயலாது...' என்று, தந்தி கொடுக்க செய்தார்.
நண்பர் பெண்ணின் திருமணத்தில் பாகவதரின் கச்சேரி மட்டுமல்ல, மணமக்களுக்கு பெரிய வெள்ளிக் கோப்பையையும் பரிசாகத் தந்தார்.
நட்பா, பணமா என்றால், பாகவதருக்கு நட்பே பெரிது. பணத்தை மதித்தவர், பாகவதர். அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்காக, நட்பிலோ, தன்மானத்திலோ என்றுமே சமரசம் செய்து கொண்டது கிடையாது.
சகல ஜீவராசிகளும் மயங்கும் இசைக்குத் தான், கந்தர்வ கானம் என்று பெயர்.- பாகவதர் குரல், கந்தர்வ கானம் தானே. அதை மெய்ப்பிக்கும்படியான, அற்புத நிகழ்வு நடந்தது.
பாகவதரின் அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவர், விளாத்திகுளம் சுவாமிகள். சங்கீதத்திலும் அவர் சிறந்து விளங்கினார். இருவரும் சந்தித்தால், எல்லா விஷயங்களையும் பேசி முடித்த பிறகு, சங்கீதக் கச்சேரியை ஆரம்பித்து விடுவர். பல ராகங்களின் நுட்பங்களையும், நுணுக்கங்களையும், அவரிடம் தான் கற்றுக் கொண்டதாக, பாகவதரே சொல்லியுள்ளார்.
ஒருசமயம், விளாத்திகுளம் சுவாமிகள், பாகவதரோடு, சென்னைக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் இருவரும், மாறி மாறி பாடிக்கொண்டே வந்தனர். சென்னைக்கு வந்தாயிற்று. பாகவதருடன் விருந்தும் சாப்பிட்டாயிற்று.
வயிறும், மனமும் நிறைந்து விட்டால், குஷியாக சங்கீதம் பிறப்பதில் அதிசயம் இல்லையே. இருவரும், பாட்டுக் கச்சேரியைத் துவக்கினர். இருவருக்கும் மிகவும் பிடித்த ராகங்கள், சண்முகப்பிரியா, கரகரப்பிரியா, புன்னாகவராளி போன்றவை.
புன்னாகவராளியில் பாட ஆரம்பித்தார், பாகவதர். அனைவரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
திடீரென்று, 'ஐயோ, பாம்பு பாம்பு...' என்று, அலறல் சத்தம் எழுந்தது.
— தொடரும்
பாகவதர் கிராப், அப்போது மிகவும் பிரபலம். அப்படிப்பட்ட சிகையலங்காரத்துடன் இருந்தால், தனக்கு அழகு கூடுவதாக நம்பினர், பல இளைஞர்கள். பெண் ரசிகைகளும் முண்டியடித்து, பாகவதர் படத்தை பார்க்க கிளம்ப ஆரம்பித்தனர். பிள்ளைகளை கட்டுப்படுத்துவது, பெற்றோர்களுக்கு பெரும்பாடாக போய் விட்டது. அப்படி ஓர் தாக்கத்தை ஏற்படுத்தினார், பாகவதர்.----
- கார்முகிலோன்