Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
* தேன் குழலுக்கு அரைத்த மாவு மீந்து விட்டால், அதை கரைத்து, உப்பு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தோசை வார்க்க, ருசியுடன் இருக்கும்.

* பிரட் மீந்து விட்டதா, அதை மிக்சியில் பொடியாக்கி உப்பு, காரம், கரம் மசாலா, கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து பிசைந்து, 'கட்லெட்'டாக எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.

* தயிர் பச்சடி நீர்த்து போய் விட்டால், சிறிது நிலக்கடலை வறுத்து, நைசாக பொடித்து கலந்து விடுங்கள். இதனால், பச்சடி கெட்டியாவதோடு, சுவையும், சத்தும் கூடும்.

* வெண்டைக்காய் முற்றி விட்டால், சீரான துண்டுகளாக வெட்டி, வெயிலில் இரண்டு நாள் காய வைக்கவும். புளித்த மோரில், உப்பு, மிளகாய் துாள் போட்டு வெண்டைக்காயை இரண்டு நாள் ஊற விட்டு, காய வைத்து எடுத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

— தொகுப்பு: எச்.சீதாலட்சுமி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us