PUBLISHED ON : மார் 23, 2025

சாமியார் ஒருவரிடம் வந்து சேர்ந்தான், சீடன் ஒருவன். அவனுக்கு பல்வேறு உபதேசங்களை செய்தார், சாமியார். அவனும் நல்ல சீடனாக இருந்து வந்தான்.
'எல்லாவற்றுக்கும் கடவுளை நம்பு. அவர் எல்லாவற்றையும் காப்பாற்றுவார் என, உபதேசித்தீர்களே. நேற்று வீசிய புயல் காற்றில், என் குடிசை விழுந்து விட்டதே...' என்றான், கோபமாக சீடன்.
'அது, நீ செய்த பாவத்தின் விளைவு...' என்றார், சாமியார்.
'அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்க, சாமி. உங்க குடிசையும் விழுந்து விட்டது...' என்றான், சீடன்.
'சில நல்லவர்களையும் கடவுள் சோதிப்பதுண்டு...' என, அசாதாரணமாக சொல்லி அசத்தினார், சாமியார்.
— புலவர் மா.ராமலிங்கம்