PUBLISHED ON : மார் 23, 2025

காளானில் பொட்டாஷியம், கால்ஷியம், புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகம் காணப்படுகிறது.
ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களின் அடைப்பை சரி செய்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளைத் தடுக்கிறது.
மூட்டு வலி, வாதம் மற்றும் மலட்டுத் தன்மை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணி, காளான்.
பெண்களுக்கு கருப்பை நோய்கள் ஏற்படாமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நரம்புகளுக்கு வலு சேர்க்கிறது.
உடல் எடையைக் குறைப்பதிலும், காளானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குறைந்த கலோரி உணவுகளில் குறிப்பிடத்தக்கது, காளான்.
காளான்கள் இன்று அதிகமாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஒருநாள் முன்னதாக அறுவடை செய்யப்பட்ட, காளான் விற்பனைக்கு வருகிறது. காற்று புகாத அளவுக்கு நன்றாக, 'பேக்' செய்யப்பட்ட காளான்களை வாங்கி பயன்படுத்தலாம்.
அவை, உண்ணக்கூடிய காளான் தானா என்பதை, ஒருமுறை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வெந்நீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்த பின், காளான்களை பயன்படுத்த வேண்டும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட காளான்களை அன்றைய தினமே பயன்படுத்தி விடுவது மிகவும் நல்லது.
தொகுப்பு: வி.சி. கிருஷ்ணரத்னம்