PUBLISHED ON : மார் 23, 2025

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 30 வயது பெண். பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எனக்கு ஒரு தங்கை. வீட்டு புரோக்கர் வேலை செய்கிறார், அப்பா. அம்மா, இல்லத்தரசி.
நான் பள்ளிப்படிப்பை முடித்ததும், கல்லுாரி சென்று படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், உறவு விட்டுப் போகக் கூடாது என, என் தாய் மாமனுக்கு, வலுக்கட்டாயமாக என்னை திருமணம் செய்து வைத்தனர்.
ஆறு மாதம் கூட அந்த வாழ்க்கை நிலைக்கவில்லை. அத்தனை கெட்ட பழக்கங்களும் உள்ள கணவர், ஒருநாள், என் நகைகளை எடுத்துக் கொண்டு, சொந்த தொழில் தொடங்கப் போவதாக கூறி, வெளியூர் எங்கேயோ சென்று விட்டார்.
கணவரின் பெற்றோர் வயதானவர்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னை அம்மா வீட்டிற்கு அனுப்பி விட்டனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக, நர்சரி பள்ளி ஒன்றில், ஆயா வேலை செய்தேன்.
அங்கு மாணவர் ஒருவரின் தந்தை, மகனை அழைத்து வந்து பள்ளியில் விடும்போது, என்னிடம் சிறிது நேரம் பேசிவிட்டு செல்வார். அவர் மனைவி இறந்து விட்டார். 'மகனுக்காகவாவது அம்மா வேண்டும். என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?' எனக் கேட்டார்.
என் எதிர்காலத்தை நினைத்து, அவரையே எனக்கு திருமணம் செய்து வைத்தனர், பெற்றோர். மாமியார் -- மாமனார் இல்லை. அவர் என்னிடம் ஒரே ஒரு நிபந்தனை தான் போட்டார். நான் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என, சத்தியம் வாங்கினார். நானும், அதற்கு ஒப்புக் கொண்டேன்.
இதில் சோகம் என்னவென்றால், எந்த மகனுக்காக நான் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டேனோ, அவன், ஒருமுறை கூட என்னை, 'அம்மா' என கூப்பிட்டதில்லை.
இதற்கிடையில், நான், கர்ப்பமாக, அதை கலைத்துவிட சொன்னார், கணவர். டாக்டரிடம் சென்றதில், கரு வளர்ந்துவிட்டது. கலைக்க முடியாது என கூறி விட்டார்.
வேறொரு டாக்டரிடம் அழைத்து சென்று, கருவை கலைக்க வைத்துவிட்டார், கணவர்.
இதில் என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. வீட்டை பராமரிக்கவும், என்னை கவனிக்கவும், கணவரின் மூத்த மனைவியின், 18 வயது உறவுக்கார பெண் ஒருத்தியை, கிராமத்தில் இருந்து அழைத்து வந்தார், கணவர்.
யாருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் கொண்டவர், கணவர். மனதில் கள்ளமில்லாமல் பழகுவதால், பல பெண்கள் அவரை, 'அண்ணா' என, அழைத்து நன்றாக பேசுவர். அந்த உறவுக்கார பெண்ணுடனும் சகஜமாக பழகுவதைப் பார்த்தும், நான் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை.
கணவரது முதல் மனைவி இறந்தபோது, ஐந்து மாத கர்ப்பமாக இருந்தாராம். 'அது பெண் குழந்தையாக இருந்திருந்தால், இந்த பெண் வயது தான் இருக்கும்...' என, அடிக்கடி கூறுவார், கணவர்.
அந்த பெண்ணை, 'குட்டி, குட்டி...' என அழைத்து, கட்டியணைப்பது, முத்தமிடுவது என கொஞ்சுவார்.
அப்பெண்ணும், அவருக்கு ஈடுகொடுத்து சரிசமமாக பேசுவாள். இதை ஆரம்பத்தில் நான் இயல்பாக எடுத்துக் கொண்டேன். ஆனால், சில நாட்களாக, என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார், கணவர்.
'இப்போது என் உடல்நிலை ஓரளவுக்கு சரியாகிவிட்டது. அப்பெண்ணை கிராமத்துக்கே திருப்பி அனுப்பி விடுங்கள்...' எனக் கூறினால், கோபித்துக் கொள்கிறார். கட்டாயப்படுத்தி அவளை நான் திருப்பி அனுப்பினால், கணவர், என்னை முற்றிலும் ஒதுக்கி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது.
நான் என்ன செய்வது? நிம்மதியை மீட்க நல்ல வழிகாட்டுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
நகைகளோடு ஓடிய உன் தாய்மாமன் கணவர், இறந்து விட்டாரா அல்லது முறைப்படி அவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டாயா? கணவர் தலைமறைவாகி விட்டார் என, காவல்துறையினரிடம் புகார் மனு அளித்து, அந்த வழியில் விவாகரத்து பெற்றாயா? எந்த விபரமும் உன் கடிதத்தில் இல்லை.
கருச்சிதைவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட உன்னை கவனித்துக் கொள்ள, மூத்த மனைவியின், 18 வயது உறவுக்காரப் பெண்ணை, உன் இரண்டாம் கணவர் அழைத்து வந்தது, ஒரு மாஸ்டர் பிளான்.
மகள் வயது பெண்ணாக, பாட்டி வயதுள்ளவராக இருந்தாலும், ஒருபெண், ஓர் ஆணுக்கு போகப் பொருள் தான்.
கொஞ்சுவது, கட்டியணைப்பது, முத்தமிடுவது, தலைகேசத்தை கோதி விடுவது, புஜங்களை தடவிக் கொடுப்பது என, மெது மெதுவாக ஸ்பரிசத்தை அறிமுகப்படுத்தி, அந்த பெண்ணுக்குள் ஒரு இணக்க மனோபாவத்தை கொண்டு வருவது, உன் இரண்டாவது கணவரின் திட்டம். வேலைக்கு வந்த விடலைப் பெண்ணும், கணவருக்கு ஒத்து ஊதுவது, இரட்டை நாயனம்.
முதலில் கணவரை, அப்பெண்ணை தொடாமல் பேசும்படி எச்சரிக்கை செய். 'உன் சென்டிமென்ட் பொய்களை நம்ப, நான் தயார் இல்லை இவளை நீ கொண்டு போய் விடுகிறாயா அல்லது நான் கொண்டு போய் விடவா?-' எனக் கேள்.
கணவர், உன்னை முற்றிலும் ஒதுக்கி விடுவார் என, பயப்படாதே. உன் பயம் தான் உனக்கு சத்ரு.
நீ இல்லாமல் இருக்க மாட்டார், கணவர். உன் சீற்றத்துக்கு பயந்து, உறவுக்கார பெண்ணை ஊரில் கொண்டு போய் விடவே செய்வார்.
அவர் உன்னை புறக்கணித்தாலோ, விவாகரத்து செய்தாலோ, பெரிய நஷ்டம் உனக்கு இல்லை.
உன் படிப்புக்கு ஏற்ற வேலையைப் பார். அம்மா வீட்டில் இரு. சாத்தியம் இருந்தால் தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் படி. 10 ஆண்டுகள் கல்விக்காக செலவிடு.
எந்த இலக்கை நோக்கி தீர்மானமாக உழைத்து பயணிக்கிறாயோ வெற்றி நிச்சயம். யாருடனும் நாம் ஒட்டி பிறப்பதில்லை; யாருடனும் நாம் ஒட்டி சாவதில்லை.
உழைப்பு நம்மை கரை சேர்க்கும்.
— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.