PUBLISHED ON : ஜூன் 22, 2025

நீ
நாட்டுக்கோட்டை செட்டி மரபில் பிறந்து
பாட்டுக்கோட்டையாய் உலா வந்தவன்;
காட்டுப் பூக்களின் தேனை எடுத்து
பாட்டுக்குள் வைத்து
பக்குவமாய் தந்தவன்!
நீ
சிறுகூடற்பட்டியில்
பிறந்த சித்தன்!
நீஅறிந்திருந்தாய் தமிழ் இலக்கணம்...
அறியாத ஒன்றேயொன்று தலைக்கனம்!
அரசியலிலும்;காதலிலும்;
நட்பிலும்;
இன்னும் பலவற்றிலும்
தடுமாறிய நீ
தமிழில் மட்டும்
தடுமாறவேயில்லை!
அதனால் தான்
இன்றுவரை முதல்
இடத்தில் இருக்கும் நீ
இடமாறவேயில்லை!
— ஸ்ரீராம் பாலசந்திரன், சென்னை.
தொடர்புக்கு: 96772 16209
நாட்டுக்கோட்டை செட்டி மரபில் பிறந்து
பாட்டுக்கோட்டையாய் உலா வந்தவன்;
காட்டுப் பூக்களின் தேனை எடுத்து
பாட்டுக்குள் வைத்து
பக்குவமாய் தந்தவன்!
நீ
சிறுகூடற்பட்டியில்
பிறந்த சித்தன்!
நீஅறிந்திருந்தாய் தமிழ் இலக்கணம்...
அறியாத ஒன்றேயொன்று தலைக்கனம்!
அரசியலிலும்;காதலிலும்;
நட்பிலும்;
இன்னும் பலவற்றிலும்
தடுமாறிய நீ
தமிழில் மட்டும்
தடுமாறவேயில்லை!
அதனால் தான்
இன்றுவரை முதல்
இடத்தில் இருக்கும் நீ
இடமாறவேயில்லை!
— ஸ்ரீராம் பாலசந்திரன், சென்னை.
தொடர்புக்கு: 96772 16209