Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
ரசிகர்களிடம் கருத்து கேட்கும், சிம்பு!

தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும், சிம்பு, அவர்களிடம், 'அடுத்தடுத்து நான் எந்த மாதிரியான கதைகளில், கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என, நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?' என, கருத்து கேட்கிறார்.

அப்படி அவர்கள் சொல்வதை கவனத்தில் வைத்து, தன்னுடைய அபிமான இயக்குனர்களிடம், 'எனக்காக இதுபோன்ற கதைகளை தயார் செய்யுங்கள்...' எனக் கூறுகிறார், சிம்பு. இனிவரும் காலங்களில் படத்துக்கு படம் மாறுபட்ட, 'கெட்-அப்'பில் தன்னை வெளிப்படுத்தவும் தயாராகி வருகிறார்.

சினிமா பொன்னையா

மகளை இயக்குனராக்கும், குஷ்பு!

நடிகை குஷ்பூ - இயக்குனர் சுந்தர்.சி தம்பதியின் மகளான, அனந்திதா சுந்தர், கமல் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய, தக்லைப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இந்நிலையில், இன்னும் சில படங்களில் மகளை பணியாற்ற வைத்துவிட்டு, தன்னுடைய, 'அவ்னி சினி மேக்ஸ்' பட நிறுவனத்தின் மூலம், அவரை இயக்குனராக அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளார், குஷ்பூ.

அந்த வகையில், விஜயின் மகன், ஜேசன் சஞ்சயை தொடர்ந்து, குஷ்புவின் மகளும் இயக்குனர் அவதாரம் எடுக்கப் போகிறார்.

— எலீசா

ரூ.15 கோடிக்கு ரேஸ் கார் வாங்கிய, அஜித்குமார்!

சமீபகாலமாக கார் ரேஸில் அதிகப்படியாக கவனத்தை திருப்பி இருக்கிறார், நடிகர் அஜித்குமார். இதையடுத்து, முதல் கட்டமாக கார் பந்தயங்களில் பங்கேற்ற போது, 'போர்ஸே, பெராரி' போன்ற ரக கார்களை வாங்கியிருந்தார்.

தான், 'ரோல் மாடல்' ஆக நினைக்கும், மறைந்த கார் ரேஸ் வீரர், அயர்டன் சென்னாவின் நினைவாக வெளிவந்துள்ள, 'மெக்லாரன் சென்னா' என்ற புதிய நவீன ரக காரை, 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார், அஜித்குமார்.

சி.பொ.,

'மல்டி ஹீரோ' கதைகள் பக்கம் திரும்பிய, ரவி மோகன்!

கடந்த, 23 ஆண்டுகளாக, ஜெயம் ரவி என்ற பெயரில் நடித்து வந்தார், நடிகர் ஜெயம் ரவி. தற்போது தன் பெயரை, ரவி மோகன் என்று மாற்றி இருக்கும் நிலையில், 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி உள்ளார்.

இதன் மூலம், யோகிபாபு நடிக்கும் படத்தை தானே இயக்கி தயாரிக்க போகிறார். மேலும் தற்போது, சிவகார்த்திகேயன் நடிக்கும், பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வரும், ரவி மோகன், அடுத்த புதிய படத்தில், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து, இரண்டு, 'ஹீரோ'களில் ஒருவராக நடிக்கிறார். இதன் பின், 'மல்டி ஹீரோ' கதைகளில் தொடர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

பீட்சா நடிகர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த இரண்டு எழுத்து படம், பாக்ஸ் ஆபிஸில் மரண அடி கொடுத்து விட்டது. இதன் காரணமாக, பலத்த அதிர்ச்சி அடைந்துள்ள நடிகர், ஏற்கனவே தான் கதை கேட்டு ஓ.கே., சொல்லி இருந்த, இரண்டு கதைகள் மீதான நம்பிக்கை இழந்து, அதில் நடிக்க மறுத்து, அதற்காக வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.

இதனால், படப்பிடிப்புக்கான அடுத்தகட்ட பணிகளில் இறங்கிய அந்த இயக்குனர்கள், இது குறித்து நடிகரிடம் கேட்டபோது, 'நீங்கள் சொன்ன அந்த கதை ஆரம்பத்தில் என்னை, 'இம்ப்ரஸ்' பண்ணியது. ஆனால், இப்போது அந்த கதை மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை...' எனச் சொல்லி, 'எஸ்கேப்' ஆகிவிட்டார்.

*****

இரண்டாவது திருமணம், மகன் பிறப்புக்கு பின், மீண்டும் சினிமாவில், 'என்ட்ரி' கொடுக்க சமீபத்தில் கோலிவுட்டுக்கு வந்திருந்தார், கேரளத்து பால் நடிகை. ஆனால், அம்மணியின் ஆஸ்தான, 'ஹீரோ'கள் மற்றும் இயக்குனர்கள் அவரை சந்திப்பதற்கு, 'அப்பாயின்மென்ட்' கூட கொடுக்கவில்லையாம்.

இதனால், அதிர்ச்சியான நடிகை, 'ஒரு காலத்தில் என்னுடன் கூடி கும்மி அடித்த நபர்களெல்லாம் இப்படி நன்றி மறந்து விட்டனரே...' என, சக நடிகையரிடம் சொல்லி புலம்பி, மீண்டும் கேரளாவுக்கே சென்று விட்டார்.

சினி துளிகள்!

ஏஸ் என்ற படத்திற்கு பின், தற்போது, ட்ரெயின் மற்றும் தலைவன் - தலைவி என, இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார், விஜய் சேதுபதி.

சிம்பு நடிக்கும், 49வது படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடிக்கும், சந்தானம், அடுத்தபடியாக, ஆர்யா உடன் ஏற்கெனவே இணைந்து நடித்த, பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கப் போகிறார்.

தமிழில், 2022ஆம் ஆண்டில், கடாவர் என்ற படத்தை தயாரித்து நடித்த, அமலாபால், தற்போது புதிய படங்களுக்கான தீவிர படவேட்டையில் ஈடுபட்டுள்ளார்

பிரேமம் படத்தில் மூலம் பிரபலமான, மடோனா ஜெபஸ்டியன், பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், 'கிளாமர்' வேடங்களில் நடித்து, மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்த தயாராகி வருகிறார்.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us