Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
சூரி செய்த சாதனை!

வெண்ணிலா கபடி குழு படத்தில், புரோட்டா காமெடி மூலம் பிரபலமான, புரோட்டா சூரி, வெற்றிமாறன் இயக்கிய, விடுதலை படத்தில், 'ஹீரோ' ஆக உருவெடுத்தார். அந்த முதல் படமே, 'ஹிட்' ஆக அமைந்தது. அதையடுத்து, அவர் நடித்து திரைக்கு வந்த, கருடன் படமும் வெற்றி பெற்றது.

குறிப்பாக, இந்திய அளவில், காமெடி நடிகர், 'ஹீரோ' ஆக நடித்து, 50 கோடி ரூபாய் வசூல் செய்த, முதல் படம் என்ற சாதனையை செய்துள்ளது. இதன் காரணமாக, கடும் உற்சாகத்தில் காணப்படுகிறார், சூரி.

சினிமா பொன்னையா

அள்ளிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள்!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என, மூன்று மொழிகளில் பரவலாக நடித்து வருபவர், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். பல ஆண்டுகளாக, 50 - 60 லட்சம் ரூபாய் என்று, சம்பளம் வாங்கியவர், கடந்த ஆண்டில் தான்,1 கோடி ரூபாயை எட்டிப் பிடித்தார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான, டில்லு ஸ்கொயர் என்ற படத்தில், படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், அனுபமா. இதனால், அவருக்கான ரசிகர் படை அதிகரித்து, ஆந்திராவில், ரசிகர் மன்றமும் திறந்துள்ளனர்.

இதனால், அவர் கேட்காமலேயே, 1 கோடி ரூபாயிலிருந்த, அனுபமாவின் படக்கூலியை, 2 கோடி ரூபாயாக உயர்த்தி, அவருக்கு, இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டனர், தெலுங்கு தயாரிப்பாளர்கள். — எலீசா

விட்டதை பிடித்த சமந்தா!

ஜவான் படத்தில், முதலில் நடிக்க இருந்தவர், சமந்தா தான். ஆனால், திடீரென்று ஏற்பட்ட, 'கால்ஷீட்' பிரச்னையால், அவருக்கு பதிலாக, நயன்தாராவை நடிக்க வைத்தார், அட்லி.

இருப்பினும், ஷாருக்கானுடன் நடிக்க இருந்த வாய்ப்பு கை நழுவிப் போனதால், அதிர்ச்சி அடைந்த, சமந்தா, அவருடன் எப்படியேனும் நடித்தே ஆக வேண்டும் என்று தொடர்ந்து கல்லெறிந்து வந்தார்.

விளைவு, தற்போது, ஹிந்தியில், ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், அடுத்து ஷாருக்கான் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகி இருக்கிறார், சமந்தா.

'என் முந்தைய படங்களை விட, இந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்து, பாலிவுட் கவர்ச்சி புயல்களை அலற விட திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், சமந்தா.

— எலீசா

அட்லிக்கு, அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!

தமிழில், விஜய் நடிப்பில், தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கிய, அட்லி, ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில், ஜவான் படத்தை இயக்கினார். அதையடுத்து, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், ஒரு படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருந்தார்.

ஆனால், ஜவான் படத்தை இயக்க, 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய, அட்லி, அல்லு அர்ஜூன் படத்தை இயக்க, 80 கோடி ரூபாய் கேட்டார். எனவே, அப்படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம், பின்வாங்கி விட்டது.

இதனால், அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டு, தற்போது, பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில், தன் அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், அட்லி.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

களவாணி நடிகர், பெரும்பாலும், படப்பிடிப்பு தளம் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு, சரக்கு அடித்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு, அவர் மீது அதிருப்தி ஏற்படவே, படங்களுக்கு, 'புக்' பண்ணுவதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில், சில ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறிய, களவாணி நடிகர், சமீபகாலமாக, சரக்கிற்கு, 'குட் பை' சொல்லி இருக்கிறார்; சினிமா வட்டாரங்களில் நடக்கும், 'மிட் நைட் பார்ட்டி'களில் கூட, தலை காட்டுவதில்லை.

மேலும், 'என்னை, யாரும், சரக்கு பார்ட்டிக்கு அழைக்காதீர்கள்...' என்று, அவரின், நட்பு வட்டாரத்தினருக்கு, 'ரெட் சிக்னல்' போட்டுள்ளார்.

சினி துளிகள்!

அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள, புஷ்பா - 2 படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட ஆறு மொழிகளில் டிசம்பர் 6ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்து வரும், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இறுதி கட்டப் படப்பிடிப்பு, மீண்டும் அஜர்பைஜானில் துவங்கியது.

விமல் நடித்து வரும், மா.பொ.சி என்ற படத்திற்கு, சார் என்று, ‛டைட்டிலை' மாற்றி வைத்துள்ளனர். இதே, ‛டைட்டிலை' கடந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளியான, வாத்தி என்ற படத்தின், தெலுங்கு பதிப்பிற்கு வைத்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

தமிழில், தலைவி மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தார். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். மறைந்த பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு கதையை இயக்கி நடித்திருக்கும், எமர்ஜென்சி என்ற படம், செப்டம்பர் 6ல், திரைக்கு வருகிறது.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us