PUBLISHED ON : ஜூன் 14, 2025

அபாய கட்டங்களில் மனிதர்கள் உயிரைக் காக்கும் வகையில் ரத்ததானம் செய்வது பெருமைக்குரியது. விபத்து போன்ற அவசர சிகிச்சை நேரங்களில் ரத்த இழப்பை ஈடுசெய்ய, தானம் பெற்ற ரத்தம் உதவுகிறது. ரத்ததானம் செய்ய முன்வருவோரிடம் மருத்துவமனைகள் வாங்கி சேமித்து உரிய நேரங்களில் அந்த ரத்தத்தை பயன்படுத்தி வருகின்றன.
இது போல் ரத்ததானம் செய்வோரை கவுரவித்து வருகிறது, உலக சுகாதார நிறுவனம். இதற்காக ஜூன் 14ம் தேதி, உலக ரத்ததானம் வழங்குவோர் தினமாக, 2005 முதல் கொண்டாடப்படுகிறது.
ரத்த வகைகளை கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் கார்ல் லாண்ட் ஸ்டெய்னர் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இது அமைந்துள்ளது. ரத்ததானம் செய்வது, இதயநோய் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் வழி கண்டறியப்பட்டுள்ளது.
-- பூபால்