Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பாங்குரா குதிரை!

பாங்குரா குதிரை!

பாங்குரா குதிரை!

பாங்குரா குதிரை!

PUBLISHED ON : ஜூன் 14, 2025


Google News
Latest Tamil News
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மண் பொம்மைகள் உலக அளவில் பிரபலம். கலைத்திறனில் உச்சகட்டமாக உள்ளது. பாரம்பரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்கு உருவாகும் மண் குதிரை பொம்மை, பாங்குரா என அழைக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்படுகிறது. இது நீண்ட கழுத்துடன் உள்ளதால் தனித்துவம் பெற்று விளங்குகிறது. துர்கா, காளி பூஜைகளில் பயன்படுகிறது. குழந்தைகள் விளையாடவும் உதவுகிறது.

களி மண்ணை பிசைந்து கையால் வடிவமைத்து, சூரிய ஒளியில் உலர்த்தி தயாரிக்கப்படுகிறது இந்த பொம்மை. செம்மண், கரி, தாவரங்களில் எடுக்கப்படும் இயற்கை வண்ணங்கள் பூசி அலங்கரிக்கப்படுகிறது. உலகளாவில் கைவினை பொருட்கள் சந்தையில் இடம்பெற்று வருகிறது.

மேற்கு வங்க பாங்குரா குதிரை, இந்தியாவின் பாரம்பரிய அடையாளமாக திகிழ்கிறது. கிராமிய கலைஞர்கள் வாழ்வுக்கு ஆதாரமாகவும் உள்ளது. இதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

- நர்மதா விஜயன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us