Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கட்டைவிரல் கணிப்பு!

கட்டைவிரல் கணிப்பு!

கட்டைவிரல் கணிப்பு!

கட்டைவிரல் கணிப்பு!

PUBLISHED ON : ஜூன் 08, 2024


Google News
Latest Tamil News
நாகர்கோவில், புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், 1994ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!

அறிவியல் ஆசிரியை ஸ்ரீபுஷ்பம் மிகவும் அன்பானவர். பாடங்களுடன் நல்லொழுக்கத்தையும் போதிப்பார்.

அன்று, கரும்பலகையில், மனித உடலமைப்பை புதிய கோணத்தில் படமாக வரைந்திருந்தார். அதில், தலை மிகப்பெரியதாக இருந்தது. கை கட்டை விரல்கள் சற்று விகாரமாக தெரிந்தன.

அவற்றை சுட்டிக்காட்டி, 'வரும் காலத்தில் மனிதன் இவ்வாறு மாறி விடுவான். பரிணாம வளர்ச்சி அடிப்படையில் உடலமைப்பில் இது போன்ற விளைவுகள் ஏற்படும்..' என பொது அறிவு புகட்டினார். அலைபேசி போன்ற தொடர்பு கருவி எதுவும் அப்போது புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை.

உடல் வளர்ச்சி எப்படி விகாரமாகும் என்பதை, 'மூளைக்கும், கட்டை விரல்களுக்கும் தான், இனி அதிக வேலை இருக்கும். பரிணாமத்தில், அவை வளர்ந்து பெரிதாக வாய்ப்பு உண்டு...' என, சுவாரசியம் குன்றாமல் விளக்கினார்.

தற்போது, என் வயது 45; தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிகிறேன். இன்று உலகம் நவீன தொடர்பு சாதனங்கள் வழி இயங்கி வருகிறது. இதை அன்றே கணித்திருந்த ஆசிரியையின் திறனை வியக்கிறேன். அவர் தந்த அறிவுரைபடி, அலைபேசி போன்ற கருவிகளை தேவைக்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறேன். குழந்தைகளுக்கும் அதை கற்றுத் தந்துள்ளேன்.

- பொ.நீலமாலினி, சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us