மயிலாடுதுறை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 10ம் வகுப்பில் படித்த போது, கணித பாடத்தில் மிகவும் பின்தங்கியிருந்தேன்.
கணித ஆசிரியர் ஆர்.கலியபெருமாள் எளிமையாக கற்பிக்கும் திறனால் ஊக்குவித்து, சிறப்பாக புரிய வைத்தார். நேரடியாக புத்தகத்தை திறந்து பாடம் நடத்த மாட்டார். அனைத்தையும் நினைவில் இருந்தே எடுத்துரைப்பார்.
ஒவ்வொரு வகுப்பிலும் பயிற்றுவிக்கும் கணக்குகளை, கரும்பலகையில் ஒரு மாணவர் பயிற்சியாக போட்டுக் காட்ட வேண்டும். அதை பின் தொடர்ந்து திருத்தங்கள் சொல்வார். தீவிரமாக முயன்றால் முடியாதது இல்லை என்பதே அவரது தாரக மந்திரம்.
அன்று கரும்பலகையில் நான் கணக்கு போடும் முறை வந்தது. மிகவும் நடுக்கத்துடன் இருந்தேன்.
பயம் நீக்கி உற்சாகப்படுத்தியவர், ஒவ்வொரு படியும் போட்டு முடித்ததும் பாராட்டினார். பாடத்தில் இருந்த பயம் மறைந்து ஆர்வம் ஏற்பட்டது.
கணக்குகளை சரியாக போட்டதால், பாராட்டுதலுடன் கை தட்டல் பெற்றேன். தொடர்ந்து, 11ம் வகுப்பிலும், அவரே கணக்கு பாடம் நடத்தினார். பொதுத்தேர்வில், 80 சதவீதம் மதிப்பெண் பெற்று வென்றேன். பின், இளநிலை, முதுநிலையில் கணிதம் பயின்றேன்.
சிறப்பாக படித்து அரசுப் பள்ளியில், ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். அந்த ஆசிரியர் வழியில் எளிமையாக பாடம் நடத்தினேன். வகுப்பில், அனைத்து மாணவ, மாணவியர் தேர்ச்சியையும் உறுதி செய்தேன்.
எனக்கு, 62 வயதாகிறது; பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்த அந்த ஆசிரியரின் பெருஞ்செயலுக்கு தலை வணங்குகிறேன்!
- ஜி.வசந்தி, கோவை.
தொடர்புக்கு: 86101 21856