PUBLISHED ON : மார் 02, 2024

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம், தம்பித் தோட்டம் மேல்நிலைப் பள்ளியில், 1993ல், 8ம் வகுப்பு படித்தேன். உடற்கல்வி ஆசிரியையாக இருந்த சந்திரா, கண்டிப்புக்கு பெயர் பெற்றவர்; உடற்பயிற்சிக்காக, வாரத்தில் இரண்டு நாட்கள் மைதானத்திற்கு தவறாமல் செல்ல வேண்டும். முதல், 15 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்; தவறாக செய்தால், பிரம்பால் அடித்து தண்டிப்பார்.
இதற்கு பயந்து, ஒவ்வொரு வாரமும் ஏதாவது காரணம் கூறி, மைதானத்திற்கு வெளியில் அமர்ந்து கொள்வேன். இதை கவனித்தவர் அன்று அழைத்து, 'உடற்பயிற்சி என்பது, மூன்று வேளை உண்ணும் உணவுப் போல அத்தியாவசியமான தேவை; அது உடலுக்கு மட்டுமல்ல; மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். பயிற்சியை உயிர் இருக்கும் வரை செய்ய வேண்டும். இதை புறக்கணிக்காமல், உபயோகப்படுத்து...' என அறிவுரைத்தார். மனம் திருந்தினேன்.
தற்போது என் வயது, 43; பள்ளியில் அந்த ஆசிரியை அன்று உரைத்ததை மனதில் கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். இளமை குன்றாமல் ஆரோக்கியமுடன் வலம் வருகிறேன். நலமுடன் வாழ வழிகாட்டியவரை வணங்குகிறேன்.
- ம.வசந்தி, விழுப்புரம்.