தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், ஸ்ரீ கோமதி அம்பாள் உயர்நிலைப் பள்ளியில், 1976ல், 9ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் தி.சு.கிருஷ்ணமூர்த்தி. ஆங்கில இலக்கணம் மற்றும் கணித பாடம் கற்று தருவார். பிழை விட்டால் அடித்து தண்டிக்க மாட்டார். தப்பு விட்ட பாடத்தை, 10 முறை எழுதி வர சொல்வார். அது மனப்பாடம் ஆகிவிடும்.
நல்லொழுக்கம், நன்னடத்தையை வலியுறுத்தி கடைபிடிக்க துாண்டுவார். வகுப்புக்கு வந்ததும், பொது அறிவு, புராண கதை, வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை எடுத்துக் கூறுவார். பாடம் நடத்தும் போது, 'மனப்பாடம் செய்து, 99 மதிப்பெண் பெறுவதை விட, புரிந்து படித்து, 35 வாங்கினால் போதும்...' என அறிவுரைப்பார். அதையே லட்சியமாக கடைபிடிக்க வலியுறுத்தி வந்தார்.
ஒவ்வொரு முறையும், பாடத்தில் தப்பு விடும் போது திருத்தியதால், பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது. அரையாண்டுத் தேர்வில், படித்த பாடத்தில் இருந்து கேள்வி வரவில்லை. அவர் கற்பித்ததை வைத்து, சொந்த நடையில் விடை எழுதி சிறப்பான மதிப்பெண் வாங்கினேன். இது, 'எப்படி கேள்வி கேட்டாலும், தகுந்த பதில் எழுதி விடலாம்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
என் வயது, 62; தமிழக அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். புரிந்து, தெளிந்து படிக்கும் நடைமுறையை கற்பித்த திறன்மிக்க அந்த ஆசிரியருக்கு தற்போது, 83 வயதாகிறது. நலமுடன் வாழ்ந்து வருகிறார். அவரை வணங்கி போற்றுகிறேன்!
- ஜி.சங்கரநாராயணன், சென்னை.