திருநெல்வேலி, பாளையங்கோட்டை, துாய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
பள்ளிக்கு, மிதிவண்டியில் சென்று வருவேன். அன்று, பள்ளி அருகே, கல்லுாரி வளாகம் வழியாக சென்ற போது கத்தையாக பணம் கிடந்தது. அதை எடுத்து தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஜான் அடிகளிடம் கொடுத்தேன்.
உடனடியாக, கல்லுாரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, அந்த பணம் கிடைத்த பகுதி பற்றிய விபரத்தை தெரிவித்தார். தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்காக வைத்திருந்ததை, ஒரு மாணவர் தொலைத்தது தெரிய வந்தது. உரியவரை கண்டறிந்து விசாரணை நடத்தி ஒப்படைத்தார் தலைமை ஆசிரியர்.
பின், பள்ளியில் அனைவரும் அறியும்படி ஒலிபெருக்கியில், என் பெயர், படிக்கும் வகுப்பு மற்றும் பிரிவு விபரத்துடன் சம்பவத்தை விபரமாக எடுத்துக் கூறி, என் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார். தரமான பேனா மற்றும் கணித செயல்முறை கற்றல் கருவியை பரிசாக தந்தார்.
அந்த நிகழ்வு ஏற்படுத்திய பெருமிதத்தால், 'நேர்மை தவறாமல் நடக்க வேண்டும்; பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது' என்ற எண்ணம் மனதில் வலுப்பெற்றது.
எனக்கு, 53 வயதாகிறது. பிரபல நாளிதழில் செய்தியாளராக பணி செய்கிறேன். செய்தி எழுதுவதிலும், வாழ்வு நடவடிக்கையிலும் நேர்மையை தவறாமல் கடைபிடித்து வருகிறேன். இதற்கு அடித்தளமாக அமைந்தது, பள்ளியில் நடந்த அந்த சம்பவம். என்னை பாராட்டி, உற்சாகப்படுத்திய தலைமை ஆசிரியரை மனதில் ஏந்தியுள்ளேன்.
- எஸ்.முப்பிடாதி, திருநெல்வேலி.
தொடர்புக்கு: 98940 09457