PUBLISHED ON : பிப் 24, 2024

உடலின் இயக்கம் பற்றி அரிய உண்மைகளை கண்டுபிடித்த விஞ்ஞானி வில்லியம் ஹார்வி, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து போக்ஸ்டோன் நகரில், ஏப்., 1, 1578ல் பிறந்தார். சிறுவயதில் சகோதர சகோதரிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவார். சில சமயம் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழியும். அப்போது, 'ஏன் ரத்தம் வழிகிறது; அது ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது' என்று சிந்திப்பார்.
கேம்பிரிட்ஜ், கேயஸ் கல்லுாரியில் பயின்றார். ஆய்வுக் கூடத்தில், தவளை, மீன், பல்லியை வெட்டி, உள்ளுறுப்புகள் இயங்குவதை ஆராய்வதில் ஆர்வம் காட்டினார். மனித உடலை அறுத்துப் பரிசோதனை செய்யவும் விரும்பினார். ஆனால், அப்போது இங்கிலாந்தில் சட்டம் அதை அனுமதிக்கவில்லை. ஆர்வம் மிகுதியால் யாருக்கும் தெரியாமல், பிணத்தை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்தார் வில்லியம் ஹார்வி.
பின், ஐரோப்பிய நாடான, இத்தாலி, பாதுவா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியில் சேர்ந்தார். அங்கு, பேராசிரியர் பெரிப்சியஸ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் ரத்தக் குழாய்கள் பற்றி நன்கு கற்று அறிந்தார்.
சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளை மனதில் கொண்டார். லண்டன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ இயல் ஆய்வு சங்கத்தில் உறுப்பினரானார். பின், மருத்துவராக நியமனம் பெற்றார்.
இங்கிலாந்து அரசக் குடும்பத்தை சேர்ந்த எலிசபெத் பிரவுனியை திருமணம் செய்தார். பாம்பு, நாய், பன்றி போன்ற விலங்கு உடல்களை அறுத்து ரத்த ஓட்டம் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிந்தார். மனித உடல்களையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் முடிவில்...
இதயம் என்பது தசையால் ஆனது
அது ரப்பர் போல் நிமிடத்திற்கு, 72 முறை சுருங்கி விரிகிறது
இதயத்தில் இருந்து ரத்தம் உடலெங்கும் ஓடுகிறது
தமனி என்ற குழாய்கள் ரத்தத்தை உடலெங்கும் எடுத்து செல்கின்றன
சிரை என்ற குழாய்கள் உடல் ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருகின்றன
இதயத்தில், நான்கு அறைகள் வேலை செய்கின்றன
உடல் ரத்த ஓட்டம், இதயத்தில் துவங்கி, இதயத்திலேயே முடிகிறது.
இந்த உண்மைகளை ஆராய்ச்சி வழியாக நிரூபித்தார்.
ரத்த ஓட்டம் பற்றி, விலங்குகளின் இதயம் மற்றும் ரத்தத்தின் இயக்க உடற்கூறு ஆய்வு நுாலை, 1628ல், லத்தீன் மொழியில் எழுதி வெளியிட்டார். உடலின் உள்உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதையும் விவரித்தார்.
ரத்தம், உடல் முழுதும் இடைவிடாமல் சுற்றி வருகிறது என்பதை விரிவாக எடுத்து கூறியுள்ளார்.
துணிந்து உண்மைகளை கூறும் அவரது ஆற்றலை கண்ட இங்கிலாந்து அரசவை மருத்துவர், ஹார்வியை பாராட்டினார். அவரது ஆற்றலை புகழ்ந்து அரசவை மருத்துவராக நியமனம் செய்தார் மன்னர்.
உலகின் பல நாடுகளுக்கு, இங்கிலாந்து அரசு துாதுவராக சென்றார் வில்லியம் ஹார்வி. அந்நாடுகளில் கண்ட பூச்சி, விலங்கு, பறவை மற்றும் செடி, மரம், மலர், காய், கனிகளை ஆர்வமுடன் ஆய்வுகள் செய்து இயற்கையின் அரிய செயல்பாட்டை விவரித்தார்.
அவரது மருத்துவ சேவையை பாராட்டும் வகையில், ஆசிய ஐரோப்பிய நாடான ரஷ்யா, தபால்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. வில்லியம் ஹார்வியின் பெயரால், ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து மருத்துவக் கழகத்தில், சொற்பொழிவு நடைபெறுகிறது. அவரது வாழ்க்கை நிகழ்வுகள், ஆராய்ச்சி விபரங்கள் பற்றி ஏராளமான நுால்கள் வெளி வந்துள்ளன.
சாதனைகள் புரிந்த ஹர்வி ஜூன் 3, 1657ல், 75ம் வயதில் மறைந்தார். மருத்துவ உலகில் அவர் ஆற்றிய மகத்தான தொண்டு, இன்றும் மக்களுக்கு நன்மை பயத்து நிற்கிறது.
- --வி.பரணிதா