PUBLISHED ON : ஜூன் 14, 2025

சென்னை, மாதவரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 8ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியை ந.குப்புலட்சுமி, கணித பாடமும் நடத்துவார். ஒழுங்கை கடைபிடிக்க கண்டிப்புடன் வலியுறுத்துவார். யாரைப் பார்த்தாலும் கனிவு பொங்கும் விதமாக இருகரம் கூப்பியபடி, 'வணக்கம்...' என பணிவுடன் கூறுவார். மாணவர்களையும் அதை கடைபிடிக்க வலியுறுத்தினார். நாளடைவில் அந்த பழக்கம், வாழ்வின் வழக்கமாகியது.
படிப்பை முடித்து ஆசிரியை பணியில் சேர்ந்தேன். எல்லா சூழலிலும் இருகரம் கூப்பி வணக்கம் சொல்வதை தவறாமல் எல்லாரிடமும் கடைபிடித்தேன். பலமுறை சங்கடம் தந்தாலும் விடாமல் தொடர்கிறேன்.
தற்போது என் வயது, 67; அரசு பள்ளி தலைமையாசிரியையாக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். உடன் பணியாற்றியோர், என்னிடம் படித்தோர், பழகியோர் என யாரும் என்னை காண வரும் போது, தவறாமல் இருகரம் கூப்பி வணங்குவதை கண்டு மகிழ்கிறேன். இதற்கு அடித்தளமிட்ட கணித ஆசிரியை ந.குப்புலட்சுமியின் மேன்மையான நினைவை போற்றுகிறேன்.
- பா.விஜயலட்சுமி, விழுப்புரம்.
தொடர்புக்கு: 90037 69498