PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

உலக வானிலை தினம்
உலக வானிலை அமைப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 1950 மார்ச் 23ல் துவங்கப்பட்டது. இத்தினம் உலக வானிலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. காலநிலை, வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஐ.நா.,வின் துணை அமைப்பாக உள்ளது. இதில் இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 'முன்னெச்சரிக்கை இடைவெளியை ஒன்றுசேர்ந்து தடுத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பூமியில் 70 சதவீதம் உள்ள கடல், உலகின் வானிலை, காலநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது.