/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஒன்றிய கவுன்சில் கூட்டம் தாமதம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அமளி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தாமதம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அமளி
ஒன்றிய கவுன்சில் கூட்டம் தாமதம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அமளி
ஒன்றிய கவுன்சில் கூட்டம் தாமதம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அமளி
ஒன்றிய கவுன்சில் கூட்டம் தாமதம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அமளி
PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM
பவுஞ்சூர்,லத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம், மதியம் 12:00 மணி வரை துவக்கப்படாமல் இருந்ததால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், லத்துார் ஒன்றியத்தில் 15 ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று, வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி தலைமையில், மாதாந்திர கவுன்சில் கூட்டம், காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளதாக, அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேர், காலை 11:00 மணிக்கு வந்து கூட்ட அரங்கில் காத்திருந்தனர்.
தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திறப்பு விழாவிற்கு, செய்யூர் சென்றனர்.
கல்லுாரி திறப்பு விழா 11:30 மணிக்கு துவக்கப்பட்டு, 12:15 மணி வரை நடந்தது.
இந்நிலையில், 12:00 மணி வரை கூட்டம் துவக்கப்படாததால் விரக்தியடைந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம், கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
பின், கல்லுாரி திறப்பு விழா முடிந்து வந்த தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு.க., கவுன்சிலர்களை சமரசம் செய்து, அதன் பின் ஒன்றிய குழு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.