/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ஜூன் 19 ராஜ்யசபா தேர்தல்... அன்புமணி, வைகோ, கமல் ஆசை நிறைவேறுமா?ஜூன் 19 ராஜ்யசபா தேர்தல்... அன்புமணி, வைகோ, கமல் ஆசை நிறைவேறுமா?
ஜூன் 19 ராஜ்யசபா தேர்தல்... அன்புமணி, வைகோ, கமல் ஆசை நிறைவேறுமா?
ஜூன் 19 ராஜ்யசபா தேர்தல்... அன்புமணி, வைகோ, கமல் ஆசை நிறைவேறுமா?
ஜூன் 19 ராஜ்யசபா தேர்தல்... அன்புமணி, வைகோ, கமல் ஆசை நிறைவேறுமா?

யாருக்கு பலன்?
அதற்கு முன் அந்த இடங்களுக்கு, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தாக வேண்டும். அதற்கான தேர்தல் ஜூன் 19ல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. தமிழகத்திலிருந்து ஒருவர் ராஜ்யசபா உறுப்பினராவதற்கு, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. தி.மு.க., கூட்டணியில், 159 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அக்கட்சிக்கு நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பர்.
![]() |
கடும் போட்டி
ராஜ்யசபாவில் இப்போது, அ.தி.மு.க.,வுக்கு தர்மர், சி.வி.சண்முகம், தம்பிதுரை, சந்திரசேகர்ஆகிய நான்கு எம்.பி.,க்கள் உள்ளனர். தர்மர் மட்டும் பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறார். லோக்சபாவில், அ.தி.மு.க.,வுக்கு ஒரு எம்.பி., கூட இல்லை. எனவே, தற்போது வாய்ப்புள்ள இரண்டு இடங்களிலும் ஜெயிக்க வேண்டும் என, பழனிசாமி விரும்புகிறார்.
எதிர்பார்ப்பில் 3 கட்சிகள்
லோக்சபா தேர்தலின் போது, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக, அ.தி.மு.க., உறுதி அளித்தது என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார். இதை பழனிசாமி வெளிப்படையாக மறுத்தாலும், தே.மு.தி.க., நம்பிக்கை இழக்கவில்லை. கடந்த முறை அ.தி.மு.க., ஆதரவுடன், ராஜ்யசபா எம்.பி.,யான அன்புமணி, அடுத்த ஆண்டு வரும் சட்டசபை தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து, தனக்கு மீண்டும் அ.தி.மு.க., வாய்ப்பு வழங்கும்; அதற்கு பா.ஜ., உதவும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.