Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பி.வி.களத்துாரில் மனுநீதி நாள்

பி.வி.களத்துாரில் மனுநீதி நாள்

பி.வி.களத்துாரில் மனுநீதி நாள்

பி.வி.களத்துாரில் மனுநீதி நாள்

PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM


Google News
செங்கல்பட்டு,பொன்விளைந்தகளத்துாரில் நாளை, மனு நீதிநாள் முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

அரசு நடத்தக்கூடிய மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில், மே மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம், பொன்விளைந்தகளத்துார் கிராமத்தில், வரும் 28ம் தேதி காலை 10:00 மணியளவில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடக்கிறது.

இம்முகாமில், பொதுக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us