Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தங்கர் பச்சான் மீது மலேஷிய தமிழர்கள் விரக்தி!

தங்கர் பச்சான் மீது மலேஷிய தமிழர்கள் விரக்தி!

தங்கர் பச்சான் மீது மலேஷிய தமிழர்கள் விரக்தி!

தங்கர் பச்சான் மீது மலேஷிய தமிழர்கள் விரக்தி!

PUBLISHED ON : ஜூன் 12, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''மதுரையில், மாடுகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டார் ஓய்...'' என்றபடியே வந்தார், குப்பண்ணா.

''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.

''மதுரை மாநகராட்சி சாலைகள்ல திரியும் மாடுகளால நிறைய விபத்துகள் நடந்துது... சாலைகள்லயே மாடுகள் அங்குமிங்கும் ஓடி நிறைய வாகன ஓட்டிகள் மேல மோதி தள்ளிடுத்து ஓய்...

''இந்த மாடுகளை பிடிக்கிற மாநகராட்சி அதிகாரிகள் அதிகபட்சமா, 3,000 ரூபாய் மட்டும் அபராதம் போட்டா... அதை மாடுகளின் உரிமையாளர்கள் ஈசியா கட்டிண்டு, திரும்பவும் மாடுகளை சாலைகள்ல திரிய விட்டா ஓய்...

''இதனால, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், இப்படி சாலைகள்ல திரியும் மாடுகளை பிடிச்சு, தென்காசியில இருக்கற கோசாலைக்கு கொண்டு போக சொல்லிட்டார்... அந்த வகையில, மறுநாளே 20க்கும் மேற்பட்ட மாடுகளை பிடிச்சு சத்தமில்லாம கோசாலைக்கு கொண்டு போயிட்டா ஓய்...

''இதுக்கு கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தரப்புல இருந்து எதிர்ப்புவந்தாலும், உத்தரவை ஸ்ட்ரிக்டா பாலோ பண்ண சொல்லிட்டார்... இதனால, இப்ப மாடுகளின் உரிமையாளர்கள், அவற்றை வெளியில விடாம அடைச்சே வச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''நாடார் சமுதாய ஓட்டுகள் எல்லாம், பா.ஜ.,வுக்கு போயிட்டுல்லா...'' என்ற பெரிய சாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''அ.தி.மு.க.,வுல பழனிசாமி தலைமை வந்த பிறகு, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த நாடார் சமுதாயத்தினருக்கு மாவட்ட செயலர், துணை பொது செயலர், அமைப்பு செயலர் போன்ற முக்கிய பதவிகள் எதையும் தரல வே...

''அதே மாதிரி, அவரது நாலு வருஷ ஆட்சியிலயும், அமைச்சரவையில் அந்த சமுதாயத்துக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்ல... இதனால, அவங்க ஓட்டுகள் எல்லாம் பா.ஜ.,வுக்கு மாறிட்டுன்னு இப்பதான் தெரியவந்திருக்கு வே...

''இதனால, 'இனியாவது, அந்த சமுதாயத்துக்கு முக்கிய பதவிகளை தந்தா தான், சட்டசபை தேர்தல்ல தென் மாவட்டங்கள்ல வெற்றி கிடைக்கும்'னு, தொண்டர்கள் எல்லாம் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''என்கிட்டயும் ஒரு சமுதாய மேட்டர் இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''கடலுார் பா.ம.க., வேட்பாளரான சினிமா இயக்குனர் தங்கர் பச்சான், தேர்தல் முடிஞ்சதும், மலேஷியாவுக்கு சுற்றுப்பயணம் போயிருக்கார்... அங்க வசிக்கிற வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட 500 பேர் கூடிய கூட்டத்துல பங்கேற்று பேசியிருக்காருங்க...

''பேசுறதுக்கு முன்னாடி, எல்லாரது மொபைல் போன்களையும், 'ஆப்' பண்ண சொல்லிட்டு, தன் பேச்சு ரகசியமா இருக்கணும்னு சொல்லிட்டாரு...

''அப்ப, 'மலேஷிய வாழ் வன்னியர்கள் ஒற்றுமையுடன் இருந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடணும்'னு சொன்னவர், 'கடலுார் தொகுதியில் உள்ள வன்னியர்கள் அனைவரும் எனக்கு ஓட்டு போட்டிருந்தால் வெற்றி நிச்சயம்'னு பேசிட்டு வந்தாருங்க...

''மலேஷியாவுல தமிழர்கள் எல்லாம் ஜாதி, மதம், மாவட்டம் வித்தியாசம் பார்க்காம தான் பழகுவாங்க... ஆந்திராவை சேர்ந்தவங்க கூட, தங்களை மதராசின்னு தான் பெருமையா சொல்லுவாங்களாம்...

''ஆனா, தங்கர் பச்சான் இங்க வந்து, வன்னியர் சமுதாயத்தினரை மட்டும் தனியா பிரிச்சு கூட்டம் நடத்தி ஜாதிய உணர்வுகளை துாண்டி விடுறதை பார்த்து, அங்க உள்ள தமிழர்கள் எல்லாம் வேதனைப்படுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us