Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'ஏய்க்க' பார்க்கும் 'ஏசி' பராமரிப்பு நிறுவனம்!

'ஏய்க்க' பார்க்கும் 'ஏசி' பராமரிப்பு நிறுவனம்!

'ஏய்க்க' பார்க்கும் 'ஏசி' பராமரிப்பு நிறுவனம்!

'ஏய்க்க' பார்க்கும் 'ஏசி' பராமரிப்பு நிறுவனம்!

PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''ஆளுங்கட்சி வெற்றிக்கு உதவியிருக்காரு பா...'' என்ற பரபரப்பான தகவலுடன், பெஞ்சில் ஆஜரானார் அன்வர்பாய்.

''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., பொறுப்பாளரா, ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளி இருந்தாரு... இவருக்கும், கோவை அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சருக்கும் நெருங்கிய நட்பு உண்டு பா...

''பொள்ளாச்சியில் தி.மு.க., ஜெயிக்கணும்னு, அ.தி.மு.க., சார்புல, 'டம்மி' வேட்பாளரை மாஜி நிறுத்தியிருக்காரு... அந்த வேட்பாளருக்கு தேர்தல் செலவுகளை ஏத்துக்கிறதா சொல்லியிருந்த மாஜி, கடைசி நேரத்துல கல்லா பெட்டியை மூடிட்டாரு பா...

''தேர்தல் பணியிலயும் தீவிரம் காட்டாம ஒதுங்கிட்டாரு... இதனால, தேர்தலுக்கு முன்னாடியே தி.மு.க., வெற்றி உறுதியாகிடுச்சு... கடைசியில், தி.மு.க., வேட்பாளர் 2.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்துல ஜெயிச்சிட்டாரு பா...

''ஏற்கனவே, ஆழியாறு குடிநீர் திட்டத்தை பொள்ளாச்சி வழியா, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்துக்கு கொண்டு செல்ல, ஆளுங்கட்சி முக்கிய புள்ளி திட்டம் போட்டாரு... இதுக்கு பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சதால, திட்டத்தை கிடப்புல போட்டிருக்காங்க பா...

''அப்பவும், விவசாயிகளுக்கு ஆதரவா மாஜி குரல் தரலையாம்... இதனால, அந்த விவசாயிகள் ஓட்டுகள் எல்லாம் பா.ஜ.,வுக்கு திரும்பி, பொள்ளாச்சியில் பா.ஜ., 2.23 லட்சம் ஓட்டுகள் வாங்கிடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.

''இஷ்டத்துக்கு பத்திரப்பதிவு பண்றாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சென்னை, மாதவரம் தொகுதி, விளாங்காடு பாக்கம் ஊராட்சியில், குளம், குட்டை, வண்டிப்பாதை, நீர்நிலை, கோவில் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செஞ்சு குடுத்துடுறாங்க... இதுக்கு, வருவாய் துறையில பட்டாவும் கிடைச்சிடுதுங்க...

''இந்த ஊராட்சியில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், 63 வீட்டு மனைகளுக்கு, 'லே -அவுட்'டே போடாம, சி.எம்.டி.ஏ., அப்ரூவல் மட்டும் வாங்கி, 60 சதவீதம் மனைகளை, கடந்தாண்டு டிசம்பர்ல பத்திரப்பதிவு பண்ணிடுச்சு...

''இன்னொரு ரியல் எஸ்டேட் நிறுவனம், அங்குள்ள குளம், வண்டிப்பாதைன்னு 7 ஏக்கர் நிலத்தை, பட்டா நிலத்துடன் சேர்த்து ஆக்கிரமித்து, விற்பனை பண்ணிடுச்சுங்க... இதன் மார்க்கெட் மதிப்பு 30 கோடி ரூபாய்னு சொல்றாங்க... பதிவுத் துறை ஐ.ஜி., விசாரிச்சா நிறைய முறைகேடுகள் வெளியாகுமுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பழைய ஏசியை பொருத்திட்டு, புது ஏசின்னு கணக்கு காட்டியிருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''செங்கல்பட்டு மாவட்டத்துல, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ., ஆபீஸ், தாலுகா ஆபீஸ் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள்ல, 'ஏசி'க்களை பராமரிக்கும் பொறுப்பை, தனியார் நிறுவனத்திடம் குடுத்திருக்கா... அந்த நிறுவனம், பழுதடைந்த ஏசிக்களுக்கு பதிலா, புதிய ஏசிக்களை மாத்துறதா சொல்லி, பழைய ஏசிக்களையே மாட்டிடுத்து ஓய்...

''இதை கண்டுபிடிச்சுட்ட பொதுப்பணி துறையின் எலக்ட்ரிக்கல் பிரிவு அதிகாரிகள், புதிய ஏசி பொருத்தப்பட்டதா சொல்லி, நிறுவனம் அனுப்பிய பில்களை பாஸ் பண்ண மறுத்துட்டா... ஆனா, சம்பந்தப்பட்ட நிறுவனம், பணத்தை வாங்க பல வழிகள்லயும் முயற்சி பண்றது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us