ADDED : ஜூலை 22, 2024 11:19 PM

ஏகாம்பரநாதர் கோவிலில் காயின் டெலிபோன் கருவி பழுது
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் பிரசாத கடை அருகில் பி.எஸ்.என்.எல்., சார்பில், 1 ரூபாய் காயின் டெலிபோன் கருவி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், மொபைல் வைத்திருந்தும், சார்ஜ் இல்லாதவர்கள், பேலன்ஸ் இல்லாதவர்கள் அவசர அவசியத்திற்கு தொடர்பு கொள்வதற்கு காயின் டெலிபோன் பூத் வசதியாக இருந்தது.
தற்போது காயின் டெலிபோன் கருவி பழுதடைந்துள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவசரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணியர் அதிகளவில் வந்து செல்லும் இடத்தில், பழுதுடைந்துள்ள காயின் டெலிபோன் கருவியை சீரமைக்க பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.