ADDED : ஜூலை 22, 2024 11:20 PM

தார் சாலை வளைவில் மண் அணைக்காததால் பள்ளம்
காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் கிராமத்தில் இருந்து, புள்ளலுார் கிராமம் வழியாக புரிசை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த தார் சாலையோரம், மண் அணைக்காமல் இருப்பதால், பிரதான சாலை வளைவுகளில் வாகனங்கள் செல்லும் போது, நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, புள்ளலுார் சாலை வளைவு ஓரம் மண்ணை அணைக்க வேண்டும்.
- -நா. அசோக், காஞ்சிபுரம்.