/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 77 வயசுலேயும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்! 77 வயசுலேயும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்!
77 வயசுலேயும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்!
77 வயசுலேயும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்!
77 வயசுலேயும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்!
PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM

சென்னை, ஆதம்பாக்கத்தில் சாலையோரம் மூலிகை ஜூஸ் கடை நடத்தி வரும், 77 வயதைக் கடந்த லலிதா: என் பூர்வீகம் ஸ்ரீரங்கம். பிறந்தது, வளர்ந்தது, வாழ்க்கைப்பட்டதெல்லாம் திருச்சி, உறையூரில் உள்ள நாச்சியார் கோவில் பகுதியில். வியாபார விஷயமாக என் வீட்டுக்காரர் மலேஷியா சென்ற போது நானும் போயிட்டேன்.
என் மகன் வளர்ந்து சித்த மருத்துவம் படித்து, அங்கேயே உள்ள ஒரு சித்த மருத்துவமனையில் வேலை பார்த்தான்; அந்த வேலை சரியாக அமையவில்லை. பிழைப்புக்காக சென்னை கிளம்பினான். அவனுடன் நானும் வந்துட்டேன்.
மூலிகைப் பொடி தயாரித்து, வியாபாரம் செய்வது தான் எங்கள் திட்டம். மகன், தன் தொழிலைக் கவனிக்க, அவனுக்கு துணையாக இருந்த நேரம் போக, மீதி நேரத்தில் நாங்கள் தயாரிக்கிற மூலிகைகளை வைத்து ஜூஸ் தயாரித்து விற்கலாம் என, யோசனை வந்தது. அப்படி, 13 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது தான் இந்த கடை.
துவக்கத்தில் அருகம்புல்லை கிரைண்டரில் அரைத்து ஜூஸ் தயாரிக்க ரொம்ப சிரமப்பட்டோம். ஆனால், தற்போது தினமும் ஆறு வகையான ஜூஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
இந்த சாலை போட்டபோது இந்த அளவுக்கு டிராபிக் இருக்காது. காலை வேளையில் நடக்கிறதுக்காகவே நிறைய பேர் வருவாங்க. சின்னதாக இருக்கிற இந்த கடையை பார்த்துட்டு வாங்கி, சாப்பிட தயங்கினாங்க.
கொஞ்ச நாளில் எங்கள் தயாரிப்பு தரமாக இருப்பதை பார்த்து விட்டு, வாங்கத் துவங்கினர். இப்பல்லாம், 'உங்க ஜூசை குடிக்கிறதுக்காக தான் இவ்வளவு துாரம் நடந்து வர்றோம்'னு சொல்றாங்க.
'எங்கிட்ட வாங்கி சாப்பிடறவங்கெல்லாம் நல்லா இருக்கணும்... இன்னும் தரமான பொருட்களை தயாரித்து கொடுக்கணும்'னு வாடிக்கையாளர்களுக்காக வயதை மறந்து ஓடிட்டே இருக்கேன்.
இது தவிர வாழைத் தண்டு, முருங்கை, பீட்ரூட், கேரட், பிரண்டை ஜூஸ்கள் தயாரிப்போம். இப்ப வெயில் நேரம் என்பதால், உளுந்து களியும், மோரும் தயாரிக்கிறோம்.
'ரெகுலர்' வாடிக்கையாளர்களுக்காக, ஒரு வாட்ஸாப் குரூப் வைத்திருக்கிறேன். அதில், இன்னிக்கு என்னென்ன கிடைக்கும்னு, 'மெசேஜ்' போட்டுடுவோம். அவங்களுக்கு தேவையானதை எடுத்து வைக்க சொல்லிடுவாங்க. வருவோர் ஏமாந்து போய் விடக் கூடாது என, அவர்களுக்கு தேவையான ஜூசை எடுத்து வெச்சுட்டு காத்திருப்பேன்.
மத்தவங்க ஆரோக்கியமாக இருக்கணும்னு நினைக்கிறதாலயோ என்னவோ, 77 வயசுலேயும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் வந்ததில்லை. என்னை பொறுத்தவரை, வாழும் வரை மத்தவங்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுக்காமல் வாழ்ந்துட்டு போயிடணும்!