/தினம் தினம்/சொல்கிறார்கள்/ முயற்சியே செய்யவில்லை என்ற குற்ற உணர்வை தவிர்க்கலாம்! முயற்சியே செய்யவில்லை என்ற குற்ற உணர்வை தவிர்க்கலாம்!
முயற்சியே செய்யவில்லை என்ற குற்ற உணர்வை தவிர்க்கலாம்!
முயற்சியே செய்யவில்லை என்ற குற்ற உணர்வை தவிர்க்கலாம்!
முயற்சியே செய்யவில்லை என்ற குற்ற உணர்வை தவிர்க்கலாம்!
PUBLISHED ON : ஜூன் 07, 2024 12:00 AM

'கேட்டரிங்' தொழிலில் கலக்கும் கோவையைச் சேர்ந்த ஐஸ்வர்யா நாகராஜ்: மாதம்பட்டி ரங்கராஜ் அண்ணா, எனக்கு பெரியப்பா மகன். எங்கப்பாவும், பெரியப்பாவும் ஒன்றாக தான் பிசினஸ் துவங்கினர். ஒரு கட்டத்தில், இரண்டு பேரும் அவங்கவங்க ஸ்டைலில் தனித்தனியாக பிசினஸ் செய்ய துவங்கினர்.
என்ன தான் இரண்டு பேரும் ஒரே துறையில் இருந்தாலும், எங்களுக்குள்ள போட்டிகள் கிடையாது. 'முதலில் குடும்பம்... உறவுக்குள்ள பிசினஸ் வந்துடக் கூடாது'ன்னு அப்பாவும், பெரியப்பாவும் சொல்லி கொடுத்திருக்காங்க.
அப்பா மாதம்பட்டி நாகராஜ், 35 ஆண்டு களாக கேட்டரிங் துறையில் இருக்கிறார். கிச்சன், சமையல், கேட்டரிங், விருந்தோம்பலை பார்த்து வளர்ந்தவள் நான். அதனால், எனக்கும் இந்த துறைக்குள்ள வரணும் என்ற ஆர்வம் சிறு வயதிலேயே வந்திருச்சு. நான் பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிட்டு, இன்டர்நேஷனல் பிசினசில் எம்.பி.ஏ., முடிச்சிருக்கேன்.
கேட்டரிங் தான் செய்யப் போறேன்னு சொன்னதும், 'இது ஆணாதிக்கம் நிறைந்த துறை... நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் உன்னால முடியுமான்னு யோசிச்சுக்கோ'ன்னு அப்பா சொன்னார்.
'என்னால முடியும், நான் உங்க பொண்ணுன்னு நிரூபித்து காட்டுவேன்'னு சொல்லி தான் சம்மதம் வாங்கினேன். ஒரு கட்டத்தில், 'இனிமே நீ தனியாகவே பண்ணலாம்'னு சொன்னார் அப்பா.
முதல் ஆர்டர் வந்தபோது, பயத்துடன், 'ஓகே' சொன்னேன். மெனு பிளானிங்ல துவங்கி, சமைச்சு டேபிளில் பரிமாறி, அவங்க முகத்தில் சந்தோஷத்தை பார்க்குறவரை அவ்வளவு பதற்றமாக இருந்தது.
'சின்ன பொண்ணா இருக்கீங்க... என்ன பண்ணிட போறீங்கன்னு நினைச்சோம். ஆனால், டேஸ்ட் சூப்பர்... பொறுமையா பரிமாறினாங்க... பார்த்துப் பார்த்து கவனிச்சாங்க'னு கிளையன்ட் சொன்ன பின் தான் உயிரே வந்தது.
கிளையன்ட் எங்களை அணுகும் போது, முதலில் மாடல் மெனு கொடுப்போம். சிலர் அவங்க கம்யூனிட்டிக்கான ஸ்பெஷல் மெனு வேணும்னு கேட்பாங்க.
'கிளையன்ட் தான் நமக்கு கடவுள் மாதிரி... நாம தினம் நாலு கல்யாணத்துக்கு வேலை பார்க்கலாம். ஆனால், கல்யாண வீட்டுக்காரங்களுக்கு அந்த கல்யாணம் தான் ரொம்ப ஸ்பெஷல். அவங்களை சின்னதா கூட முகம் சுளிக்க வெச்சிடக் கூடாது. விருந்தோம்பல் ஸ்பெஷலாக இருக்கணும்'னு சொல்வார் அப்பா.
சில விஷயங்கள் நம்மால் முடியாததாக இருக்கலாம். ஆனால், முடியாதுன்னு அதுலிருந்து விலகி நிற்க வேண்டாம்; முயற்சி செய்து பார்க்கலாம்.
'ஒர்க் அவுட்' ஆனால் சந்தோஷம்; இல்லைன்னாலும் முயற்சி செய்த திருப்தியாவது இருக்கும். முயற்சியே பண்ணலையேங்கிற குற்ற உணர்வை தவிர்க்கலாம். தயக்கத்தை துாக்கி போட்டுட்டு தைரியமா வாங்க.