Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பிசினஸ் ஆசை உள்ளுக்குள் இருந்தா ஆறப்போடாதீங்க!

பிசினஸ் ஆசை உள்ளுக்குள் இருந்தா ஆறப்போடாதீங்க!

பிசினஸ் ஆசை உள்ளுக்குள் இருந்தா ஆறப்போடாதீங்க!

பிசினஸ் ஆசை உள்ளுக்குள் இருந்தா ஆறப்போடாதீங்க!

PUBLISHED ON : ஜூன் 04, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
சிறுதானிய தின்பண்டங்கள் தொழிலில், ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு, 'டர்ன் ஓவர்' செய்யும் மதுரையைச் சேர்ந்த நாகலட்சுமி: நான் பிறந்தது, வளர்ந்தது கோவை. என் பிறந்த வீட்டில், தின்பண்டங்கள் செய்யும் தொழில் செய்து வந்தனர்.

பிளஸ் 2 முடிச்ச கையோடு, எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. கணவர் ஊரான மதுரைக்கு வந்தேன். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தாங்க. வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக போயிட்டு இருந்துச்சு.

ஆனால், எங்க வீட்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, எல்லாத்தையும் திருப்பி போட்டுச்சு. வருமானத்துக்கு என்ன வழி, அதுக்கு என்ன செய்யலாம்னு தேடி நின்னபோது, அப்பா மாதிரி நாமளும் தின்பண்டங்கள் செய்யலாம்னு முடிவெடுத்தேன். 2006-ல் அடுப்பை பத்த வெச்சுட்டேன்.

ஆரம்ப காலத்துலயே உற்பத்தி, மார்க்கெட்டிங்னு எல்லாத்துக்கும் தனித் தனியாக ஆள் போட்டு வேலை பார்த்ததால், செலவுகள் அதிகமாச்சு. தொழில் என் கைவிட்டு போயிடுச்சு.

மீண்டும் 2012-ல், பிசினஸ்னு முடிவு செய்தேன். ஆனால், இந்த முறை சிறுதானியங்கள் பக்கம் கவனத்தை திருப்பினேன்.

சிறுதானியத்தில் முறுக்கு, காராசேவு, ரிப்பன் பக்கோடான்னு கார வகைகளும், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டில் செய்த தினை அல்வா, மைசூர் பாக், லட்டுன்னு இனிப்பு வகைகளும் செய்ய துவங்கினேன்.

துவக்கத்தில் என்னோட முதலீடு, 10,000 ரூபாய் தான். வியாபாரம் 'பிக் அப்' ஆனதும், அந்த லாபத்தில் இருந்து தான் அடுத்தடுத்து மெஷின் வாங்கினேன்.

தொடர்ந்து, மானியத்தில் கிடைத்த லோனை எடுத்தேன். ஆர்டர்களுக்கு ஏற்ப ஆட்களை நியமிச்சு, டெலிவரியை முடிச்சு கொடுத்தேன். பிசினஸ் பரபரன்னு வளர்ந்தது. சிறுதானிய மால்ட்டும் விற்பனை செய்கிறோம்.

கல்லுாரி மாணவியர், குடும்பத் தலைவியர், மகளிர் குழுக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டல் பயிற்சி கொடுக்கிறேன்.

நாம் தொழிலில் வளர்றதோடு, மத்தவங்களையும் ஏணியாக ஏத்திவிடுறதுல இருக்கிற நிறைவு, ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

தொழில் துவங்கி, 12 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறேன். மாசம் லட்சம் ரூபாய்க்கு குறையாமல் பிசினஸ் நடக்கிறது.

பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு, பெரிய வேலைக்கு போயிட்டிருக்கிற சிலர், 'பன்னிரண்டாவது மட்டுமே படிச்சுட்டு எங்களைவிட பல மடங்கு சம்பாதிக்கிறியே'னு ஆச்சரியமாக சொல்லி என்னை பாராட்டுவாங்க.

அது தான் தொழிலோட சிறப்பு. உங்களுக்குள்ளும் பிசினஸ் ஆசை இருக்கா... அப்படின்னா, இனியும் அதை ஆறப்போடாதீங்க!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us