Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ எல்லாத்தையும் எங்களுக்கு கொடுத்தது காதல் தான்!

எல்லாத்தையும் எங்களுக்கு கொடுத்தது காதல் தான்!

எல்லாத்தையும் எங்களுக்கு கொடுத்தது காதல் தான்!

எல்லாத்தையும் எங்களுக்கு கொடுத்தது காதல் தான்!

PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
'அவுட்டோர் போட்டோ ஷூட்'டில், தம்பதி சமேதராக கலக்கும், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவைச் சேர்ந்த அய்யம்பெருமாள் - காயத்ரி:

அய்யம்பெருமாள்: நான் படித்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங். ஆனாலும், எனக்கு போட்டோகிராபி ரொம்ப பிடிக்கும். திருச்சி மலைக்கோட்டையில், 'ஸ்ட்ரீட் போட்டோகிராபி' செய்ய முடிவெடுத்து அங்கு சென்றபோது தான், காயத்ரியை சந்தித்சேன்; காதல் மலர்ந்தது.

இன்ஜினியரிங் முடிச்சதும் அடுத்து என்னன்னு குழப்பத்தில் இருந்தபோது, 'கேமரா தான் உன் வழி' என்ற தெளிவை கொடுத்தது காயத்ரி தான்.

குறிப்பாக, 'அவுட்டோர் போட்டோ ஷூட்டுக்கு வேல்யூ இருப்பதால், புகைப்படக்கலை நம்மை நிச்சயம் கைவிடாது'ன்னு காயத்ரி சொல்லிட்டே இருப்பா.

கையில் பணம் இல்லாததால், கடன் வாங்கி தான் ஸ்டூடியோவை துவங்கினேன். கூடுதலாக பணம் தேவைப்பட்ட சமயத்தில் காயத்ரி, தன் நகைகளை கொடுத்து உதவினாள்.

அவுட்டோர் ஷூட்டிங்கில், வேலையை இருவரும் பிரித்து கொள்கிறோம். அதாவது, காயத்ரி போட்டோ கிராபராக செயல்படுவார். நான் வீடியோ பணிகளை கவனிக்கிறேன்.

நாங்கள் சமிக்ஞைகளுடன் வேலைகளை பார்ப்பது, பிரேக்கின்போது காயத்ரியின் கால்களை நான் பிடித்து விடுவது, பணிச்சோர்வில் சில வினாடிகள் என் மீது காயத்ரி சாய்ந்து எழுவது போன்ற, 'க்யூட் மொமென்ட்'களை, எங்களுடன் இணைந்து பணிபுரியும் வீடியோகிராபர் ஒருவர் எங்களுக்கே தெரியாமல் கேண்டிட் வீடியோவாக எடுக்க, அதை எங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினோம்.

அந்த வீடியோ செமையாக ஹிட்டடிக்க, அதன்பின் எங்களது ஒவ்வொரு புராஜெக்டிலும் தம்பதியாக தாங்கள் வேலை செய்யும் வீடியோக்களை ஷேர் செய்ய துவங்கினோம். அவை எங்களை இன்ஸ்டா பிரபலங்களாக்கி, பிசினஸ் வளர்ச்சிக்கும் உதவின.

எங்களோட வேலை நாட்களில் எங்க 2 வயசு மகனை பிரிந்திருக்கும் கஷ்டத்தை தவிர, வேறு எந்த கவலையும் எங்களுக்கில்ல. இந்த தொழிலை துவங்கியபோது, கேமராவை தவிர வேற எதுவும் எங்ககிட்ட இல்ல.

இப்போது, வத்தலகுண்டு தவிர திருச்சியிலும் எங்க கிளை அலுவலகம் இருக்குது. 20 பேர் வேலை பார்க்கின்றனர்.

இரண்டு கார் வாங்கியிருக்கோம். எல்லாத்தையும் எங்களுக்கு கொடுத்தது... காதல் தான்.

காயத்ரி: திருமணத்திற்கு பின், நான் திட்டமிட்டிருந்தபடியே புரொபஷனல் போட்டோகிராபி பக்கம் என் கவனத்தை செலுத்தினேன். குறிப்பாக, பேபி ஷூட் போன்றவற்றை எங்க நிறுவனத்தில் எடுக்க துவங்கினேன்.

எனக்கும் அவுட்டோர் ஷூட்டிங் போக ஆர்வம் ஏற்பட, அவர்கூட கிளம்பினேன். 'ஆனால், நாள் முழுக்க நின்னுட்டே வேலை பார்க்கணும்... உனக்கு கஷ்டமா இருக்கும்'னு இவர் தயங்கினார்.

ஆனால், நான் ரொம்ப உறுதியாக இருந்தேன். போட்டோ கிராபர் ஜோடியாக நாங்க அவுட்டோர் களம் கண்டது இப்படித்தான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us