Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ தனியாக பயணம் செய்து பாருங்கள் நிறைய 'பாசிட்டிவ்' மாற்றங்கள் உருவாகும்!

தனியாக பயணம் செய்து பாருங்கள் நிறைய 'பாசிட்டிவ்' மாற்றங்கள் உருவாகும்!

தனியாக பயணம் செய்து பாருங்கள் நிறைய 'பாசிட்டிவ்' மாற்றங்கள் உருவாகும்!

தனியாக பயணம் செய்து பாருங்கள் நிறைய 'பாசிட்டிவ்' மாற்றங்கள் உருவாகும்!

PUBLISHED ON : ஜூலை 08, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
பிரபல நடிகையாக இருந்து, குடும்ப தலைவியாக இருக்கும் ஸ்ரீஜா:

சினிமா வேண்டாம்; குடும்ப வாழ்க்கையே போதும்னு முடிவெடுத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மீடியாக்களில் கூட தலைகாட்டாமல், சென்னையில் சந்தோஷமாக வாழ்ந்துகிட்டிருக்கேன்.

செவ்வந்தி படத்தில் நானும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மூத்த மகனான சந்தன பாண்டியனும் சேர்ந்து நடிச்சோம். பெரிதாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும், இருவரும் காதலில் விழுந்தோம். அவர் தான், நம்பிக்கை கொடுத்து, என் மனசை மாத்தினார்.

'நானும், என் குடும்பத்தினரும், உன் விருப்பங்களுக்கும், எண்ணங்களுக்கும் தடையாக இருக்க மாட்டோம்'னு கல்யாணத்துக்கு முன்னாடியே இவர் வாக்குறுதி கொடுத்தார்.

அந்த சுதந்திரம் எல்லா விஷயத்துலயும் எனக்கு பரிபூரணமாக கிடைச்சிருக்கு. அப்பவும் சரி, இப்பவும் சரி, இவர் அதிகமா பேச மாட்டார். நான் தான் பேசிட்டே இருப்பேன்.

தனி மனித உணர்வுகளுக்கு இந்த குடும்பத்தில் எல்லாரும் மதிப்பு கொடுப்போம். குறிப்பாக, பிள்ளைகளுக்கு முழு சுதந்திரமும், முடிவெடுக்கும் வாய்ப்பையும் கொடுப்போம். விபரம் புரியும் வரைக்குமாச்சும் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கிறது பெற்றோரின் அடிப்படை கடமை.

எல்லாருக்கும் மதிப்பு கொடுக்கிறதுல இருந்து, சமூகத்தில் நமக்கான பொறுப்புணர்வு, பாலின பேதமில்லாமல் வீட்டு வேலைகளை செய்வது என, என் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுத்திருக்கேன்.

பிறரை சார்ந்து வாழாமல், எந்த சூழலையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கன்னு சொல்லுவேன்.

கல்லுாரி செல்லும் வரைக்குமே பிள்ளைகளின் உடல்நலனுக்கு கெடுதலான உணவுகளை பெரும்பாலும் நான் கொடுத்ததில்லை. படிப்பு, வேலை என, பிள்ளைங்க வெளியூரில் தங்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

அதனால், சிறு வயசுலயே பிள்ளைங்களுக்கு சமைக்க கற்றுக் கொடுத்தேன். அமெரிக்காவில் இருக்கும் எங்கள் மகன், அவனே தான் சமைச்சுக்கிறான். ஆன்மிகத்திலும் அதிக நாட்டம் கொண்ட நான், காசி, ராமேஸ்வரம், வேளாங்கண்ணி உட்பட இந்தியாவின் முக்கிய கோவில்களுக்கு தனியாகவே பயணம் செய்திருக்கிறேன்.

எல்லா மத கடவுள்களையும் வணங்குவேன். என் இறை நம்பிக்கை, குடும்பத்தினருக்கும், அவங்களோட வேலைகளுக்கும் தொந்தரவாக அமையக் கூடாது.

அதனால் தான், விருப்பப்பட்ட கோவில்களுக்கு தனியாகவே போயிடுவேன். என் பலம், பலவீனத்தை தெரிஞ்சுக்க தனிப்பட்ட பயணம் உதவியாக இருக்கு.

எல்லாரும் ஆண்டில் ஓரிரு முறையாச்சும் தனியாக டிராவல் செய்து பாருங்கள். உங்களுக்குள்ளும் நிறைய பாசிட்டிவ் மாற்றங்கள் உருவாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us