ADDED : ஜூன் 19, 2025 07:23 AM
தெரு விளக்கு எரியுமா?
நோணாங்குப்பம், நியூ காலனி பகுதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
மாணிக்கம், நோணாங்குப்பம்.
குடிநீர் தட்டுப்பாடு
பூரணாங்குப்பம் ஏ.எப்.டி., ராஜிவ்காந்தி நகரில் குடிநீர் சரியாக வராமல் உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குமார், பூரணாங்குப்பம்.
உயர் மின் டவரில் ஆயில் கசிவு
பூரணாங்குப்பம் ராஜிவ் காந்தி நகர் வழியாக செல்லும் உயர் மின் அழுத்த டவரில் இருந்து ஆயில் கசிந்து வருகிறது.
மணி, பூரணாங்குப்பம்.
தெரு நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரவிக்குமார், முதலியார்பேட்டை.