ADDED : ஜூன் 20, 2025 02:26 AM
பகலில் எரியும் தெரு விளக்கு
தட்டாஞ்சாவடி கமிட்டி அலுவலகம் மணிலா குடோன் பகுதியில் இரவு, பகலாக தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கிறது.
குமரன், தட்டாஞ்சாவடி.
சாலையில் வேகத்தடை தேவை
முத்தியால்பேட்டை சோலை நகர், செங்கழுநீர் அம்மன் கோவில் தெருவில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
விவேகானந்தன், முத்தியால்பேட்டை.
சுகாதார சீர்கேடு
உப்பளம் துறைமுகத்தில் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
பழனிராஜா, முதலியார்பேட்டை.
ஆக்கிரமிப்புகளால் நெரிசல்
ராஜ்பவன் தொகுதி, நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பழனி, புதுச்சேரி.