ADDED : ஜூன் 19, 2025 07:22 AM
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்
கள்ளக்குறிச்சி, ஏமப்பேரில் புறக்காவல் நிலையம் பின்புறம் உள்ள சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-முத்துக்குமார், கள்ளக்குறிச்சி.
குப்பையால் அவதி
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரிஹரன், கள்ளக்குறிச்சி.
இடிந்த மார்க்கெட் கமிட்டி சுற்று சுவர்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், மழை வெள்ளத்தால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நிலையில், விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
-கிருஷ்ண பிரதாப் சிங், மணம்பூண்டி.
பூட்டிக்கிடக்கும் பொதுக்கழிப்பறை
அரகண்டநல்லுார் பேரூராட்சி வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டியே கிடக்கிறது.
-பிரதாப், அரகண்டநல்லுார்.
மின் விளக்குகள் தேவை
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் - நிறைமதி சாலையில் வாகன போக்குவரத்து மிகுதியாக உள்ள நிலையில், மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் அச்சமடைகின்றனர்.
-ராமன், கள்ளக்குறிச்சி.