ADDED : ஜூலை 15, 2024 11:34 PM

இருண்டு கிடக்கும் சாலை
பங்கூர் எம்.என்.குப்பம் முதல் ஆரியப்பாளையம் வரை சாலையோர மின் விளக்குகள் அனைத்தும் பழுதாகி கிடப்பதால் சாலை இருண்டு கிடக்கிறது.
அய்யப்பன், வில்லியனுார்.
சாலையில் பள்ளம்
விழுப்புரம் நெடுஞ்சாலையில் ரெட்டியார்பாளையம் பொன்நகர் சந்திப்பு அருகே சாலையில் பள்ளம் உள்ளது.
மனோஜ், ரெட்டியார்பாளையம்.
சாலையில் திரியும் கால்நடைகள்
முத்திரையர்பாளையம் மாரியம்மன் கோவில் முதல் குறுக்கு தெருவில் கால்நடைகள் திரிவதால், பள்ளி சிறுவர்கள், முதியோர் நடந்து செல்ல அஞ்சுகின்றனர். வாகனங்களில் எளிதாக செல்ல முடிவதில்லை.
ஆறுமுகம், முத்திரையர்பாளையம்.
விபத்து அபாயம்
காமராஜர் சாலை அண்ணாமலை ஓட்டல் எதிரில் குப்பை தொட்டி சாலையில் வைக்கப்பட்டுள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மூர்த்தி, புதுச்சேரி.