Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : மே 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை: சில ஊடகங்கள், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியை உடைக்கும் நோக்கத்தில், தவறான செய்திகளை தெரிவிக்கின்றன. 'திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் நீடிக்க மாட்டார். அழகிரி, கூட்டணிக்கு எதிராக பேசுகிறார்' என்ற பொய்யை பரப்பி, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. இத்தகைய தகவல்கள் சில மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உந்துதலால், அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்படுகின்றன.

கூட்டணியை முறிக்க நினைக்கிறவங்க, ராகுல் பெயரில் வதந்தி பரப்பினாலும் ஏத்துக்கலாம்... அழகிரி பெயரில் பரப்பினா, அதை காங்., ஆபீஸ் பாய்கூட நம்ப மாட்டாரு!

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ அறிக்கை: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, திருச்சியில் இருந்து பெங்களூரு, கொச்சி, திருப்பதி உள்ளிட்ட மூன்று நகரங்களுக்கு புதிய ரயில்கள் இயக்கும்படி கோரிக்கை வைத்தேன். 'இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்து சொல்லுங்கள்' என, மத்திய அமைச்சர் கூறினார். திருச்சி தொகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க, திருச்சி - திருப்பதி ரயிலை தேர்ந்தெடுத்து, அதை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டேன்.

திருச்சி தொகுதியில் இருக்கும் ஏழுமலையான் பக்தர்களின் ஓட்டுகள் என்றென்றும் இவருக்குதான்!

த.மா.கா., துணைத்தலைவர் முனவர்பாட்ஷா பேட்டி: தே.ஜ., கூட்டணிக்கு தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமை வகித்து வருகிறார். இந்த கூட்டணி விரிவடைய வாய்ப்புகள் அதிகம்; சுருங்க வாய்ப்பு இல்லை. பழனிசாமி தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். தி.மு.க., ஆட்சிக்கு எதிரான மக்களின் எண்ண ஓட்டம், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவான ஓட்டுகளாக மாறும். தி.மு.க., கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமையில்லை.

தி.மு.க., கூட்டணி கட்சிகள், ஏழு வருஷத்துக்கும் மேலாக ஒற்றுமையாகத்தான் இருக்காங்க... அதை முறியடிக்கணும் என்றால், தே.ஜ., கூட்டணி இன்னும் பலமிக்கதாக மாறணும்!

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும். மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள், 2026ல் உறுதியான தீர்ப்பை அளிப்பர். ஜன., 9ல் கடலுாரில் நடக்க உள்ள தே.மு.தி.க., மாநாட்டுக்குள், கூட்டணி உள்ளிட்டவற்றை எல்லாம் முடிவு செய்து, மிகப் பெரிய அறிவிப்பு வெளியிடப்படும்.

அப்ப, ஜன., 9 வரை எந்த கூட்டணியையும் பகைச்சுக்காம, நாசுக்கா அரசியல் பண்ணுவாங்க போலிருக்கு!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us