PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாட, கோவை மாவட்டம், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன் தி.மு.க.,வினர் திரண்டனர். வழக்கம் போல் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.
அப்போது, சிலர் தட்டில் மாம்பழங்களை அடுக்கி ரோட்டுக்கு எடுத்து வந்தனர். லட்டுக்கு பதிலாக, மாம்பழங்களை மக்களுக்கு வழங்கப் போகின்றனர் என, அனைவரும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அவற்றை ஆளுக்கொன்றாக கையில் எடுத்து, கசக்கிப் பிழிந்து ரோட்டில் வீசியெறிந்து, தி.மு.க., வெற்றியையும், பா.ம.க., தோல்வியையும் கொண்டாடினர். அங்கிருந்த ஒருவர், 'சாப்பிடுற பழத்தை, இப்படியா ரோட்டில் பிழிஞ்சு வீணாக்குவது... அதை நமக்கு கொடுத்திருந்தால், வீட்டுல ஜூஸ் போட்டாவது குடிச்சிருக்கலாம்... இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ...' என, முணுமுணுத்தபடியே நகர்ந்தார்.