PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

துாத்துக்குடி மாவட்டம், கீழவல்லநாடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பங்கேற்று, மாணவ - மாணவியருடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசுகையில், 'உங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள். பிடித்த துறையில் தான், நமக்குப் பிடித்த விஷயத்தை மகிழ்ச்சியோடு செய்ய முடியும். மற்றவர்களை பார்த்து, துறையை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சி இருக்காது' என்றார்.
இதைக் கேட்ட மாணவி ஒருவர், 'மற்றவர்களைப் பார்த்து துறையை தேர்வு செய்தால் மகிழ்ச்சி இருக்காது... பிடித்த துறையை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்னு மேடம் நமக்கு அட்வைஸ் பண்றாங்க, சரி... இவங்க அரசியலை பிடித்து போய் தேர்ந்தெடுத்தாங்களா அல்லது அவங்க அப்பா, அண்ணனை பார்த்து வந்தாங்களான்னு சொல்லலையே...' என முணுமுணுக்க, சக மாணவியர் சத்தமின்றி சிரித்தனர்.