PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM

மதுரையில், ஏப்., 2 முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ள மா.கம்யூ., கட்சியின் அகில இந்திய மாநாடு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறுகையில், 'பா.ஜ., அரசின் கார்ப்பரேட் பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அழிந்தும், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் நலிந்தும் காணப்படுகின்றன. பிரதமர் மோடியின் ஆதரவோடு, கார்ப்பரேட் முதலாளிகள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
'அத்தகைய கார்ப்பரேட் முதலாளித்துவ கொள்கைக்கு எதிராக வியூகம் வகுக்க இம்மாநாட்டில் விவாதிக்கப்படும். இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்வார்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'சமீபத்தில் கேரளாவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், அதானி உட்பட கார்ப்பரேட் முதலீடுகளை அதிகம் ஈர்த்தவர் பினராயி விஜயன். அங்கு அதானிக்கு சிவப்பு கம்பளம் விரித்துவிட்டு, எல்லை தாண்டியதும் எதிர்க்கின்றனரே... நல்லா அரசியல் பண்றாங்கப்பா...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.