PUBLISHED ON : மார் 14, 2025 12:00 AM

திருச்சி மண்டலத்தில் உள்ள எட்டு மாவட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகளின் ஆய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது. கூட்டம் துவங்குவதாக கூறப்பட்ட காலை 9:00 மணிக்கு அமைச்சர் நேரு வந்து விட்டார்.
ஆனாலும் அதிகாரிகளில் பலர், மற்ற அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என்று யாரும் வரவில்லை. இதனால், மேடைக்கு செல்லாமல் அமைச்சர் நேரு, 45 நிமிடங்கள் காத்திருந்தார். அனைவரும் வந்த பின்னரே மேடைக்கு சென்றார்.
ஏற்கனவே, கோபக்காரரான நேருவை 45 நிமிடம் காத்திருக்க வைத்ததால், மேடையில் ஏதும் கத்தி விடுவாரோ என்ற பதற்றத்துடனேயே அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். ஆனால், அமைச்சர் நேரு ஆய்வு கூட்டத்தை சுமுகமாக முடித்து விட்டு கிளம்பினார்.
'நல்லவேளை... அமைச்சருக்கு இன்னைக்கு நல்ல மூடா இருக்கப் போய் தப்பிச்சோம்...' என, ஒரு அதிகாரி கூற, சக அதிகாரிகள் சிரித்தபடியே கலைந்தனர்.